ட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள் உருவாக்கி வரும் புதிய தளம்!

ட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள் உருவாக்கி வரும் புதிய தளம்!

ட்விட்டர் நிறுவனத்தில் பணி நீக்கத்திற்கு ஆளான முன்னாள் ஊழியர்கள் சிலர் ஒன்றுகூடி ட்விட்டருக்கு போட்டியாக SPILL எனும் தளத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் சூழலில் முன்னாள் ட்விட்டர் ஊழியர்களின் இந்தச் செயல் கவனம் பெற்றுள்ளது.

கடந்த 2022 அக்டோபரில் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பணியாற்றி வந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். ஊழியர்களில் சிலர் தாமாகவே முன்வந்து பணியில் இருந்து விலகினர்.

இந்நிலையில், தற்போது ட்விட்டர் தளத்திற்கு புதிய போட்டியாளராக SPILL எனும் தளம் உருவாகி வருகிறது. இதனை ட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள்தான் உருவாக்கி வருகின்றனர். SPILL தளத்தின் வீடியோ ஒன்றையும் அதன் வடிவமைப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் ட்விட்டர் தளத்திலும் இதனை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

நிதி சார்ந்த ஆதாரம் மற்றும் வேலைக்கு ஆள் சேர்ப்பது குறித்த தகவலும் இதில் வெளியாகி உள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் பல்வேறு சமூக வலைதளங்கள் வலம் வரும் சூழலில் இதன் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

error: Content is protected !!