தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட வரைவு மசோதா,

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட வரைவு மசோதா,

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிப்பதற்காக புதிய சட்ட வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் போலீசார் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியதில் காவலர் சுப்ரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசாரை ரவுடிகள் தாக்கும் சம்பவம் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ரவுடிகள் உயிரிழக்கும் போது அக்கறை காட்டும் மனித உரிமைகள் ஆணையம், போலீசார் மீது ஏன் காட்டுவதில்லை என சரமாரியாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என ஆணையிட்ட நீதிபதிகள், ரவுடிகளை ஒழிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட வரைவு மசோதா, குழுவின் மூலம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், இந்த புதிய சட்ட வரைவு மசோதா எப்போது பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து பதிலளிக்க உள்துறை செயலருக்கு உத்தரவிட்டு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

error: Content is protected !!