பெரியபாண்டியன் கொலை: 4 முக்கிய குற்றவாளிகள் ராஜஸ்தானில் கைது

பெரியபாண்டியன் கொலை: 4 முக்கிய குற்றவாளிகள் ராஜஸ்தானில் கைது

சென்னை கொளத்தூர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் ராஜஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்று விட்டனர். இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்த்ரான் போலீசார் நாதுராம், அவனது மனைவி, தினேஷ் சவுத்ரி ஆகிய 3 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் தலைமறைவாகி விட்டதால் அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்தனர்.

இந்நிலையில் தினேஷ் சவுத்திரி ஜோத்பூரில் ஒரு கொள்ளை வழக்கில் போலீசாரிடம் சிக்கினான். அவனிடம் நடத்திய விசாரணையில் அவன் ஜெய்த்ரானில் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடியது தெரிய வந்தது. இதனையடுத்து ஜோத்பூர் போலீசார் உடனடியாக ஜெய்த்ரான் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஜெய்த்ரான் போலீசார் அவனை உடனடியாக கைது செய்தனர்.

இணைக்கமிஷனர் சந்தோஷ்குமார் தலைமையில் ராஜஸ்தானில் உள்ள சென்னை தனிப்படை போலீசார் தினேஷ் சவுத்ரியை ராஜஸ்தான் கோர்ட்டில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்டு வாங்கி அவனை சென்னைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். தலைமறைவாகவுள்ள நாதுராமை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக முனைந்துள்ளனர்.  மேலும் பெரியபாண்டியன் கொல்லப்பட்டபோது அவரைத் தாக்கிய செங்கல்சூளை உரிமையாளர் தேஜாராம், அவரது மனைவி, மகள் ஆகியோரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!