3,5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் – மாநில கலிவிக் கொளகையில் ஆலோசனை!

3,5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் – மாநில கலிவிக் கொளகையில் ஆலோசனை!

டந்த 2022ம் ஆண்டு புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது சுமார் 2 வருடங்களாக பொதுமக்கள், மாணவர்கள், மற்றும் கல்வி நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரிடையே கருத்துக்கள் கேட்கப்பட்டு, அக்கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்திற்கென உருவாக்கப்பட்ட 600 பக்கங்கள் கொண்ட மாநில கல்விக் கொள்கைக்கான அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது.

முன்னதாக இதற்காக நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாணவிகள், பெற்றோர் சொன்ன கருத்து/ ஆலோசனைகள் இவை

சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும்.

வேற்றுமொழி திணிப்பு வேண்டாம்; எங்களுக்கு இந்தி மொழி வேண்டாம்.

தமிழ், ஆங்கிலம் மொழி போதுமான நிலையில் ஆங்கில மொழி பயிற்சி தர வேண்டும்.

விளையாட்டுக்கென தனிப்பாடம் வேண்டும்.

விவசாயம் குறித்து ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாடம் கற்றுத்தர வேண்டும்.

6 ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி தர வேண்டும்.

6 ஆம் வகுப்பு முதல் கணினி பயிற்சி வேண்டும்.

பெண்களுக்கு கழிப்பறை வசதியும், நாப்கின் மற்றும் நாப்கின் இயந்திரம் வழங்க வேண்டும்.

பதினொன்றாம் வகுப்பு, பன்னிரெண்டாம் மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க வேண்டும்.

நிர்வாக அலுவல் ரீதியான பணிகளை மேற்கொள்வதால் முக்கிய பாடங்களுக்கான வகுப்புகளை எடுக்க முடியாமல் ஆசிரியர்கள் உள்ளனர். இதனால் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் பாதிக்கிறது என்றனர்.

மலைக்கிராமங்களில் பேருந்து வசதி வேண்டும்.

ஆசிரியர் பணிகளை நிரப்ப வேண்டும்.

யோகா மற்றும் தியானங்களுக்கு பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும்.

ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.

மன அழுத்தம் குறைய நீதி, போதனை வகுப்பு வேண்டும் உள்ளிட்ட கருத்துகளைத் தெரிவித்தனர்.

அதை எல்லாம் கேட்ட பின் வழங்கியுள்ள இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கியமான அம்சங்கள்,

3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருக்கக் கூடாது

*12ம் வகுப்பு மட்டுமின்றி 11ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும் கல்லூரிகளில் சேர்க்கை நடத்த வேண்டும்.

*நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்.

*ஆங்கிலம், தமிழ் என இருமொழிக் கல்வி பின்பற்றப்பட வேண்டும்.

*கல்வி என்பது மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

*எம்ஜிஆர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்களாக அமைக்க வேண்டும்.

*கல்லூரி முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

*சிபிஎஸ்சி, Deemed University அகியவற்றிக்கான கட்டணங்களை சீரமைபதற்காக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.

*5 வயது பூர்த்தியாளர்கள் 1-ம் வகுப்பில் சேரலாம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும்

*1ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர வேண்டும்.

இதையடுத்து, மாநில கல்விக் கொள்கைக்கான அறிக்கை மீது பலகட்ட ஆலோசனைகள் நடத்தப்படும் எனத் தெரிகிறது. அதன்பிறகு தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!