தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவு!- அதிகாரப்பூர்வ முழுத் தகவல்!

தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவு!- அதிகாரப்பூர்வ முழுத் தகவல்!

மிழ்நாடு சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு வீதம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விவரங்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தமிழ்நாடு மொத்த வாக்குப்பதிவு 72.78% என்றும் அதிக வாக்குப்பதிவு தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 87.33%.ஆகவும் குறைவான வாக்குப் பதிவான தொகுதிகள் சென்னை வில்லிவாக்கம் – 55.52% தொகுதி என்றும் தெரிய வந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக பாலக்கோட்டில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்திலேயே குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகின என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்நிலையில் முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளான எடப்பாடி – 85.60% சதவீதமும், மு க ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் – 60.52% சதவீதமும் , டிடிவி தினகரன் களமிறங்கிய கோவில்பட்டியில் – 67.43 % மற்றும் கோவை தெற்கு – 60.72 % சதவீதம் என்று தெரிய வந்துள்ளது

இதோ முழு விபரம்:

error: Content is protected !!