டி20- இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா!

டி20- இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா!

டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்கா அணியும் சிறப்பான பந்துவீச்சால் 11.5 ஓவர்களில் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அஸ்மத்துல்லா ஓமர்சாய் 10 ரன்கள் எடுத்திருந்தார். உமர்சாய் மட்டுமே அந்த அணிக்காக இரட்டை இலக்கை தொட்டார். தென்னாப்பிரிக்கா சார்பில் மார்கோ ஜான்சன் மற்றும் தப்ரேஸ் ஷம்சி அதிகபட்சமாக தலா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். இதுபோக, ரபாடா மற்றும் நோர்க்யா தலா 2 விக்கெட்களையும் எடுத்திருந்தனர்.

57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு இலக்கை விரட்டி வெற்றிபெற்றது. இதன்மூலம், தென்னாப்பிரிக்கா அணி உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதியோடு வெளியேறியது.

இதன் மூலம் 32 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்தது! ஏழு வாய்ப்பில் எட்டாததை எட்டாவது வாய்ப்பில் எட்டிப்பிடித்த தென்னாப்பிரிக்கா! ஆப்கான் அரையிறுதியை எட்டியது எப்படி கொண்டாடப்பட்டதோ அவ்வாறு கொண்டாடப்பட வேண்டியது தான் தென்னாப்பிரிக்கா பைனல் சென்றது. 1992, 1999, 2007, 2015, 2023 என ஐந்து 50 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதியிலும், 2009, 2014 T20 உலகக்கோப்பை அரையிறுதியிலும் வாய்ப்பை விட்டவர்கள், இன்று முதன்முறையாக இறுதி போட்டியை தொட்டுவிட்டனர்.

தடை செய்யப்பட்டு மீண்டு கிரிக்கெட் விளையாட வந்து 32 ஆண்டுகளில் முதன்முறையாக உலகக்கோப்பை இறுதி போட்டி விளையாடுகிறது என்பதுதான் ஹைலைட்

ராஜேஷ்.

error: Content is protected !!