பீகாரில் பாலம் திறப்பு விழா காணும் முன்பே இடிந்து விழுந்தது!

பீகாரில் பாலம் திறப்பு விழா காணும் முன்பே இடிந்து விழுந்தது!

பீகார் மாநிலம் அராரியா மாவட்டம் பக்ரா நதியின் குறுக்கே ரூ. 12 கோடியில் சிக்டி, குருஷகந்தா நகரை இணைக்கும் பிரமாண்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் தேதி குறிப்பிடாமல் திறப்பு விழாவிற்காக தயாராகி இருந்தது.இந்நிலையில் இம்மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பக்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் வரிசையாக விழுந்தது. பாலம் இடிந்து விழுவதை அங்கிருந்த இளைஞர்கள் மொபைலில் வீடியோவாக எடுத்தனர். இதன் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்னும் திறக்கப்படாமல் உள்ளதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும் இது குறித்து சிக்டி தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் மூலம் பாலம் கட்டுவதற்காக டெண்டர் எடுத்த நிறுவன உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

error: Content is protected !!