நடிகர் சங்கத்தில் திடீர் தீ: முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் நாசம்-வீடியோ!

நடிகர் சங்கத்தில் திடீர் தீ: முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் நாசம்-வீடியோ!

சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்க அலுவலகத்தில் இன்று காலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தேனாம்பேட்டையிலிருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள், கணிப்பொறிகள் ஆகியவை தீயில் எரிந்து நாசமாயின.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் வழக்கு விசாரணையில் இருப்பதால் முடிவுகள் வெளியாகவில்லை. இந்த தேர்தல் தொடர்பான ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், நிர்வாகப் பொறுப்பாளர்களாக இருந்த நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் நடிகர் சங்க கட்டிடம் கட்ட காண்டிராக்ட் விட்ட விவகாரம் தொடர்பான பைல்களும் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

error: Content is protected !!