Jio-வை தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது Airtel!

Jio-வை தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது Airtel!

ந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, 4ஜி சேவைக்குள் அடியெடுத்து வைத்தபோது கட்டணங்களை அதிரடி சலுகையில் வழங்கியது. ஜியோவால் தங்கள் கட்டணத்தையும் குறைக்கும் நிலைக்கு மற்ற ஆபரேட்டர்களும் தள்ளப்பட்டனர். ஆனால், தற்போது விலை அதிகரிப்பிலும் மற்ற நிறுவனங்களுக்கு முன்னோடியாக மாறியுள்ளது. நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 10 முதல் 20% வரை உயர்த்தி ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதை அடுத்து ஏர்டேல்லும் தனது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை 10 முதல் 21 சதவீதம் வரை அதிகரித்து இந்தப் புதிய கட்டண உயர்வு ஜூலை மூன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.

இது குறித்து ஏர்டெல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிதி ரீதியாக ஆரோக்கியமான வணிக மாதிரியை செயல்படுத்த, ஒரு பயனருக்கு மொபைல் சராசரி வருவாய் (ஏஆர்பியு) ரூ.300 க்கு மேல் இருக்க வேண்டும் என்பதை பார்தி ஏர்டெல் பராமரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் “ஏர்டெல் தனது மொபைல் கட்டணங்களை 2024 ஜூலை 3 முதல் மாற்றி அமைக்க உள்ளது. பட்ஜெட் சவாலான நுகர்வோர் மீதான எந்தச் சுமையையும் நீக்கும் வகையில், நுழைவு நிலை திட்டங்களில் மிகக் குறைந்த விலை உயர்வு (ஒரு நாளைக்கு 70 பைசாவுக்கும் குறைவாக) இருப்பதை உறுதி செய்துள்ளோம்.” என பார்தி ஏர்டெல் ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது. அத்துடன் புதிய கட்டணங்களாக, அன்லிமிடெட் வாய்ஸ் திட்டங்களில், ரூ.179 ரீசார்ஜ் திட்டம் ரூ.199 ஆகவும், ரூ.455 திட்டம், ரூ.599 ஆகவும், ரூ.1,799 திட்டம் ரூ.1,999 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!