அன்னபூரணி- விமர்சனம்!

அன்னபூரணி- விமர்சனம்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன் தாரா நடிப்பில், அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் வந்திருக்கும் படம்.

திருச்சி ஶ்ரீரங்க நாதருக்கு நெய்வேத்தியம் சமைக்கும் குடும்பத்தில் வளரும் பெண்குழந்தை ஸ்டார் ஹோட்டல் செஃப் ஆக ஆசைப்படுகிறாள் அவளது ஆசை நிறைவேறியதா என்பதே படம்.

பிராமணப் பெண் ஒருத்தி நான் வெஜ் சமைக்கும் ஸ்டார் ஹோட்டல் செஃப் ஆக முடியுமா ? கேட்கும் போதே பிரச்சனையை ஏற்படுத்தும் இந்த ஒன் லைன் தான் கதை.

நம்ம விடுகளிள் எப்போதும் லேடீஸ்தான் சமையல் செய்றாங்க. ஆனால் பெரிய ஸ்டார் ஹோட்டல்களுல ஏன் ரொம்ப குறைவான அளவுல லேடீஸ் செஃப்பா (சமையல் கலைஞர் )இருக்காங்க” என்று அன்னபூரணி படத்தில் சத்யராஜ் கேட்கும் கேள்விக்கு பதிலாக இந்த  அன்னபூரணி  படத்தின் திரைக்கதையை அமைதிருக்கிறார் டைரக்டர் நீலேஷ் கிருஷ்ணா.

நயன்தாராவுக்கு செஃப் ஆக வேண்டும் என்பது ஆசை, அப்பாவை எதிர்த்து வீட்டை எதிர்த்து படிக்கும் நாயகி ஒரு கட்டத்தில் சுவை நரம்பையும் இழக்கிறார் அவர் தன் கனவில் ஜெயித்தாரா என்பது தான் அன்னபூரணி.

அன்னபூரணியின் போராட்டங்களின் வழியே படம் சொல்லியிருக்கிறார் இயக்குநர். படத்தின் முதல் சில  காட்சிகளிலேயே ஸ்ரீரங்க கோபுரங்கள், வீதிகள், அக்ரஹாரம், கதை மந்தார்கள், பாசுரங்கள் என பல விஷயங்களை அழகான விஸுவலில் சொல்லி, ஷங்கரின் அஸிஸ்டெண்ட் என்பதை நிரூபித்து விடுகிறார் இயக்குநர். அவருக்கு மேக்கிங் நன்றாக வருகிறது.

என்னதான் ஜாதியில்லை பெண் விடுதலை என நாம் பேசினாலும் நடைமுறை இன்னும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது அதை படம் பல இடங்களில் தொட்டுச்செல்வது அழகு. அதிலும் இறுதிக்காட்சிகள் நன்று.

நயன்தாரவிற்கு 75 வது படம் முழுப்படமும் அவர் மீது தான் பயணிக்கிறது. மற்ற அனைவரும் அவருக்கு சப்போர்ட்டாக மட்டுமே வருகிறார்கள். அதை உணர்ந்து நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் சூப்பர் சொல்லும்படியான இடம் இல்லை.

சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ஜெய் மூவரும் நயன்தாராவிற்கு உதவி செய்யும் பாத்திரங்கள் அவ்வளவே !

நடிப்பில் மிக பிரமாதம் என்று சொல்ல வைப்பவர் அப்பாவாக நடிக்கும் அச்சுத் குமார்தான். ஒரு  வைஷ்ணவராகவும், மகள் மீது இருக்கும் பாசத்திற்க்கும், சமூக கேள்விகளுக்கும் நடுவில் தவிக்கும் மனிதராக சிறப்பாக நடித்திருக்கிறார்.

நடிகை சச்சு ஐம்பது ஆண்டுகள் தன் மீது சமூகம் திணித்து வைத்திருக்கும் அழுத்ததை கேள்வி கேட்கும் இடத்தில் கவர்கிறார்.

Annapoorani Movie Review- உணவின் காதலி நயன்தாராவின் விருந்து அறுசுவையா,  அறுவையா.? அன்னபூரணி எப்படி இருக்கு?முழு விமர்சனம் - Cinemapettai

படத்தின் மிகப்பெரும் பிரச்சனை படத்தில் அடுதடுத்த காட்சிகளை ஒரு குழந்தை கூட எளிதாக கணித்து விடுவது தான். அடுத்ததாக படம் முழுக்க நெஞ்சைத் தழுவி விடும் பழைய மாவு காட்சிகளும், லாஜிக் பொத்தல்களும்.

படத்தில் நயன்தாராவுக்கு எந்தப்பிரச்சனை வந்தாலும் அது எளிதில் நீங்கி விடுகிறது அதனால் படத்தின் மீதான ஈர்ப்பு குறைந்து விடுகிறது.

மேக்கிங் ஓகே ஆனால் கொஞ்சம் திரைக்கதை சம்பவங்களை நன்றாக யோசித்திருந்தால் படம் இன்னும் மெருகேறியிருப்பாள் அன்னபூரணி.

மொத்தத்தில் ரசிகர்களிடம் வாங்குவதென்னவோ கம்மி ரேட்டிங்

error: Content is protected !!