பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (Clerk) பணிவாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (Clerk) பணிவாய்ப்பு!

நாட்டில் உள்ள எஸ்பிஐ தவிர்த்த 11 பொதுத்துறை வங்கிகளுக்கான காலி பணியிடங்கள் IBPS நடத்தும் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், நடப்பாண்டு 11 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது 2025 – 2026ஆம் ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெறவுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

காலியாக உள்ள 6,128 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 665 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பேங்க் ஆப் இந்தியா (16 பணியிடங்கள்), கனரா வங்கி ( 40), சென்ட்ரல் வங்கி (90), இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் (75), பஞ்சாப் நேஷனல் வங்கி ( 35), பஞ்சாப் சிந்த் வங்கி ( 09) என மொத்தம் தமிழகத்தில் 665 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.

கல்வி தகுதி:

இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதியை பொறுத்தவரை ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 28 வயது உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.07.1996 க்கு முன்பாக பிறந்தவர்களும் 01.07.2004 பிறகு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க முடியாது. எனினும் அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளவுர்வுகள் உண்டு. எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.நீங்கள் ஒரு திபெத்தியன் அகதியாக இருக்கும் பட்சத்தில் அதற்கான சான்றுகள் வைத்திருந்தால் நீங்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

முதன்மை தேர்வு, மெயின் தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், புதுவை ஆகிய நகரங்களில் முதன்மை தேர்வு நடைபெறும். மெயின் தேர்வை பொறுத்தவரை சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருது நகர், புதுச்சேரி ஆகிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்:

எஸ்சி, எஸ்டி உள்ளிட்டவர்களுக்கு ரூ.175, மற்றவர்களுக்கு ரூ.850 தேர்வு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதாவது official இணையதளமான CRP CLERKS என்ற இணையதளத்திற்குள் சென்றால் அதில் Apply online என்ற ஆப்ஷன் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்குள் சென்றால் CLICK HERE FOR NEW REGISTRATION என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். பிறகு உங்களது பெயர் உள்ளிட்டவற்றை சமர்ப்பித்தால் உங்களது மெயில் ஐடிக்கு ரெஜிட்ரேஷன் நம்பரும், பாஸ்வோர்டும் கொடுக்கப்படும். இந்த பாஸ்வேர்டை நீங்கள் வேண்டுமென்றால் எடிட் செய்து கொள்ளலாம்.பிறகு இந்த நம்பரையும், பாஸ்வேர்டையும் கொண்டு எளிதில் தேர்வுக்கு விண்ணபிக்க முடியும். தேர்வுக்கு அப்ளை செய்வதுக்கு முன்பு உங்களிடம் உங்களது பாஸ்போர்ட் அளவு போட்டோ, கையெழுத்து, இடது கை பதிவு ரேகை உள்ளிட்டவைகளை எடுத்து வைத்து கொள்ளவும்.

மேலும் தகவலுக்கு www.ibps.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

21.07.2024 .

error: Content is protected !!