தேர்தல் கால இணையதளம்!

தேர்தல் கால இணையதளம்!

பாலிடேரியன் (https://www.politarian.com/) எதிர்வரும் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள இணையதளம். இந்த தேர்தல் தொடர்பான தகவல்களையும், செய்திகளையும், கணிப்புகளையும் வழங்கும் நோக்கத்துடன் துவக்கப்பட்டுள்ளது. அதிபர் தேர்தல் தொடர்பாக பொதுவாகவும், மாநிலங்கள் வாரியாகவும் தகவல்களை அறிய வழி செய்யப்பட்டுள்ளது. வரைபடங்களின் மீதும் தகவல்களை அறியலாம். பயனாளிகள் கணிப்புகளையும் சமர்பிக்க வழி இருக்கிறது. ஆனால், எல்லாமே இப்போதைக்கு வரைவு வடிவிலேயே உள்ளது. தகவல்கள் இனி தான் பதிவேற்றப்பட வேண்டும்.

தேர்தல் காலத்தில் முக்கிய தளமாக விளங்கலாம். இந்த தளம் எப்படி வளர்ச்சி பெறுகிறது என பார்க்கலாம்.

இந்த தளம் உங்களுக்கு ஏமாற்றம் அளித்தால் வெள்ளை ஒலிகளை உருவாக்கித்தரும் இந்த தளம் (https://thenoic.es/ ) உற்சாகம் அளிக்கலாம். இந்த தளத்தை புரிந்து கொள்ள வெள்ளை ஒலி கோட்பாட்டை விரிவாக அறிய வேண்டும் .

சைபர்சிம்மன்

error: Content is protected !!