யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று தொடக்கம்!

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று தொடக்கம்!

லக கோப்பை கால்பந்து போட்டிக்கு பிறகு, உலக கால்பந்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் ஜெர்மனியில் இன்று தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் இத்தாலி உட்பட 24 நாடுகள் பங்கேற்கின்றன.

கூடவே ஜெர்மனி, இத்தாலி, இஙகிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் என முன்னாள் உலக சாம்பியன்களும் களம் காண உளளன. போட்டியில் பங்கேற்கும் நாடுகள் தலா 4 அணிகள் கொண்ட 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று இன்று முதல் ஜூன் 26ம் தேதி வரை நடைபெறும். தொடர்ந்து நாக் அவுட் சுற்றான ‘சுற்று-16’ ஜூன் 29 முதல் ஜூலை 2ம் தேதி வரையிலும், காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 5, 6 தேதிகளிலும் நடக்கும்.

அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 9, 10 தேதிகளில் நடத்தப்படும். இறுதி ஆட்டம் ஜூலை 14ம் தேதி நடக்கும். இந்த ஆட்டங்கள் அனைத்தும் ஜெர்மனியில் உள்ள பெர்லின், மியூனிக், டார்ட்மண்ட், ஹம்பர்க், ஃபிரங்க்பர்ட் உட்பட 10 நகரங்களில் நடைபெற உள்ளன. இன்று நள்ளிரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி, ஸ்காட்லாந்து என பிரிவு-ஏ அணிகள் களம் காணுகின்றன.

இந்த லீக் சுற்றின் முதல் போட்டி, ஜெர்மனி-ஸ்காட்லாந்து அணிகள் இடையே, இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு (ஜூன்15) 12.30 மணிக்கு தொடங்குகிறது.

error: Content is protected !!