ஹரா – விமர்சனம்!

ஹரா – விமர்சனம்!

விஜய்ஸ்ரீ டைரக்‌ஷனில் சில்வர் ஜுப்ளி நாயகன் மோகன் நடித்துள்ள ஹரா படம் . அனுமோல், சாரு ஹாசன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மனோபாலா, சிங்கம் புலி, தீபா ஷங்கர், சுரேஷ் மேனன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ரஷாந்த் அர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 14 ஆண்டுகள் கழித்து மோகன் நடித்துள்ள ஹரா படம் பார்ப்போரை திருப்திப்படுத்தியே அனுப்புகிறது.

கோயம்புத்தூர் காலேஜ் ஒன்றில் படித்துக் கொண்டிருந்த தனது மகள் நிமிஷா திடீரென்று தற்கொலை செய்து கொள்கிறார். மகளின் தற்கொலைக்கான உண்மையான காரணத்தை தேடிச் செல்லும் நாயகன் மோகனுக்கு சமூகத்தில் நடக்கும் அதிர்ச்சிகரமான குற்ற செயல் பற்றியும், அதன் பின்னணி பற்றியும் தெரிய வருகிறது. அதனை நோக்கி பயணிப்பவர், தனது மகளின் மரணத்திற்கும் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார். மகளின் மரணத்திற்கு மட்டும் இன்றி சமூகத்திற்காகவும் அவர்களை எடுக்கிறார் . ஒரு சூழலில் போலீஸ் மோகனைச் சுற்றி வளைக்கிறது. இதை அடுத்து நடப்பதை சுவைபட சொல்லி இருப்பதுதான் ஹராப் படக் கதை.

80களில் பலரின் உள்ளம் கவர் கள்வனாக திரையில் நடித்து வருடங்கள் 30 கடந்தும் இப்போதும் உடல் தோற்றத்தை ஸ்லிம்மாக பராமரித்து வரும் மோகனை பாராட்டியே ஆக வேண்டும். இளமை துள்ளலுடன் அந்த காலகட்டங் களில் நடித்த மோகன் இந்த படத்தில் தனது வயதுக்கு ஏற்ற வேடத்தில் நியாயம் சேர்க்கும் வகையில் பொறுப்பு மிக்க தந்தையாக நடித்து அழுத்தமான உணர்வு களை வெளிப்படுத்தி இருக்கிறார். தன் மகளுக்கு என்ன ஆனது அவரை கடத்தி கொலை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் தன்னைத் தேடும் நிலையிலும் வெளிப்படை யாக பஸ்ஸிலும் காரிலும் மோகன் பயணிப்பது திரில் அனுபவத்தை தருகிறது. ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் சில்மிஷம் செய்யும் வாலிபரை சுட்டு தள்ளும் மோகன் அதிர்ச்சி ஏற்படுத்துகிறார். ஊர் முழுக்க தனது படத்தை ஒட்டி போலீஸ் தேடும் நிலைமையில் அவரே போலீஸ் நிலையத்திற்கு சென்று கேள்வி கேட்பது அடுத்து என்ன நடக்குமோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துகிறது.

மோகனின் மனைவியாக நடித்திருக்கும் அனுமோல், மகளாக நடித்திருக்கும் சுவாதி, வில்லனாக நடித்திருக்கும் சுரேஷ் மேனன், அமைச்சராக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், முதலமைச்சராக நடித்திருக்கு பழ கருப்பையா, அனிதா நாயர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.இளம் நாயர்களாக நடித்திருக்கும் அறிமுக நடிகர்கள் சந்தோஷ் பிரபாகர் மற்றும் கெளசிக் ராம் இருவரும், நாயகன் மோகனுக்கு மட்டும் இன்றி படத்திற்கும் பக்கபலமாக பயணித்திருக்கிறார்கள். சந்தோஷ் பிரபாகர் காதல் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் முதல் படம் என்ற அடையாளம் தெரியாதவாறு நேர்த்தியாக நடித்திருக்கிறார்.

யோகி பாபு ஒரு காட்சியில் வந்தாலும் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார். அவருடன் சேர்ந்து சிங்கம் புலியும் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார் . தாதா 87 இல் உட்கார்ந்த இடத்திலேயே மிரட்டிய சாரு ஹாசன் இப்படத்திலும் அந்த கதாபாத்திரத்தை தொடர்ந்திருக் கிறார். இதிலும் உட்கார்ந்த இடத்திலேயே மிரட்டுகிறார்.கள்ளத் துப்பாக்கி விற்கும் நபராக வரும் மொட்டை ராஜேந்திரன் தன் பங்கிற்கு சிரிப்பூட்ட முயற்சிக்கிறார்

ரஷாந்த் அர்வினின் பின்னணி இசை கதைக்கு ஓரளவு பலம் சேர்க்கிறது, ஆனால் பாடல்கள் அந்தக் கால பாசப்பறவைகள் நினைவுகளைக் கிளறி விடுகிறது.
சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் எடிட்டர் கை வண்ணத்தில் பலே சொல்ல வைக்கிறது.

கம்பேக் கொடுக்கும் மோகனுக்காக ஒரே கதையில் குடும்பம், பாசம், கடத்தல், ஆக்ஷ்ன், சென்டிமெண்ட், காமெடி, சஸ்பென்ஸ் என சகலத்தையும் மிக்ஸ் செய்து கலவை சாதமாக படத்தை வழங்கி இருக்கிறார் டைரக்டர் விஜய் ஸ்ரீஜி.

மொத்தத்தில் இந்த ஹரா – மோகன் ரீ என்ட்ரிக்கான படம்

மார்க் 3/5

error: Content is protected !!