மெக்காவில் வெப்ப அலை : பலியான ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 550 ஆக அதிகரிப்பு!.

மெக்காவில் வெப்ப அலை : பலியான ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 550 ஆக அதிகரிப்பு!.

மெக்காவில் வீசும் வெப்ப அலை காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு 1.8 மில்லியன் யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அவர்களில் 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்ததாக சவுதி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த திங்களன்று மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸை (125 பாரன்ஹீட்) எட்டியதாக சவுதி தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த கடும் வெப்பத்தை தாங்க முடியாமல், உயிரிழந்தவர்களில் குறைந்தது 323 பேர் எகிப்தியர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலோர் வெப்பம் தொடர்பாக உயிரிழந்ததாக இரண்டு அரபு தூதர்கள் மேற்கோளிட்டுள்ளனர்.

இதுவரை பதிவாகியுள்ள உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கையை 577 ஆக உள்ளது. மெக்காவில் உள்ள மிகப்பெரிய அல்-முஐசெமில் உள்ள பிணவறையில், எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான் மற்றும் செனகல் ஆகிய நாடுகளில் இருந்து மொத்தம் 550 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், வெப்பம் காரணமாக எத்தனை இறப்புகள் நிகழ்ந்தன என்பதை பெரும்பாலான நாடுகள் இன்னும் குறிப்பிடவில்லை. கடந்த ஆண்டு பல்வேறு நாடுகளால் குறைந்தது 240 யாத்ரீகர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது, அவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியர்கள் என்று தெரிய வந்துள்ளது.

Related Posts

error: Content is protected !!