அதிபரான முதல் நாளில் டிரம்ப்பின் அதிரடி டாப் 10 கையெழுத்து விபரம் இதோ!
அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள டிரம்ப் கடந்த முறை,’ அதிபருக்கு எவ்வளவு சம்பளம் என்பது கூட எனக்குத் தெரியாது. ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி அளித்தபடி, நான் அதிபராக பொறுப்பேற்றதும் அதற்கான சம்பளத்தைப் பெற மாட்டேன். ஆனாலும் சட்டப்படி 1 டாலராவது பெற வேண்டியது கட்டாயம் என நினைக்கிறேன். எனவே ஆண்டுக்கு 1 டாலர் சம்பளமாக பெற்றுக்கொள்வேன்’ என்று சொன்னார். இப்போது அதெல்லாம் சொல்லாமல் ”இந்த நாளிலிருந்து, நமது நாடு மீண்டும் செழித்து வளர்ந்து உலகம் முழுவதும் மதிக்கப்படும். ஒவ்வொரு தேசமும் நம்மைப் பார்த்து பொறாமைப்பட வைப்போம். இனி நம்மை யாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம். எனது நிர்வாகத்தின் ஒவ்வொரு நாளிலும், நான் அமெரிக்காவை முதன்மையாகக் கருதுவேன். நமது இறையாண்மை மீட்டெடுக்கப்படும். நமது பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். நீதியின் அளவுகோல்கள் மீண்டும் சமநிலைப்படுத்தப்படும். மேலும் பெருமைமிக்க, வளமான மற்றும் சுதந்திரமான ஒரு தேசத்தை உருவாக்குவதே எங்கள் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற கடவுளால் நான் காப்பாற்றப்பட்டேன்” என்று தெரிவித்தார்.
இதை அடுத்து அதிபரான முதல் நாளில் டொனால்ட் டிரம்ப்பின் அதிரடி டாப் 10 கையெழுத்து விபரம் இதோ:
1. 2020ல் நடந்த அதிபர் தேர்தலின் முடிவில் நடைபெற்ற அமெரிக்க பாராளுமன்ற தாக்குதலில் சிறையில் அடைக்கப்பட்ட 1500 பேருக்கு மேல் இன்று சிறையில் இருந்து விடுவிக்க அவர்களுக்கான தண்டனையை ரத்து செய்தது!.
2 . அமெரிக்காவிலே குழந்தை பிறந்தாலே அவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை என்ற இருந்த சலுகை ஒன்றை இன்று ரத்து செய்தார். இதன் மூலம் அமெரிக்க நாட்டுக்குள் சட்டத்துக்கு புறம்பாக குடியேறிய பெற்றோர்களுக்கு பேரிடி.
3 . பிப்ரவரி முதல் நாள் முதல் கனடா மற்றும் மெக்சிக்கோ மூலம் வரும் பெருவாரியான பொருட்களுக்கு சிறப்பு கூடுதல் வரி விதிப்பில் கையெழுத்திட்டது. இது அமெரிக்காவை நம்பி இருக்கும் வர்த்தக நாடுகளுக்கு பேரிடி.
4 . முன்னாள் அதிபர் ஜோ பைடன் கையெழுத்து இட்ட 90 % சதவிகித ஆணைகளை ரத்து செய்தது டேமேக்கராட்டிக் கட்சிக்கு பெரிய அதிர்ச்சி.
5 . பாரிஸ் கிளைமேட் சேஞ்ச் ஒப்பந்தத்தை இரண்டாவது முறையாக ரத்து செய்தார். தான் அதிபராக இருந்த பொது ரத்து செய்த ஒப்பந்தத்தை ஜோ பைடன் திரும்பவும் கையெழுத்து இட்டு ரெனிவ் பண்ணியதை இன்று டிரம்ப் ரத்து செய்தார்.
6 . மெக்சிக்கோ – அமெரிக்கா எல்லையில் தேசிய பேரிடர் – National Emergency கொண்டு வந்து இனிமேல் விசா இல்லாமல் யாரும் நுழைய முடியாதவாறு மாற்றியமைத்தார்.
7 . மாநில மற்றும் பெடரல் பே ரோலில் வேலை செய்யும் அரசாங்க மற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு உடனடியாக முழு நேரமும் அலுவுலகத்துக்கு வேலைக்கு வர வேண்டும் மற்றும் தற்காலிக பணியாளர்களை நியமிக்க கூடாது என உத்தரவு. இதன் மூலம் பல ஆயிரம் பேர் தினமும் வேலைக்கு வர வேண்டும் என்பது பெரிய அதிர்ச்சி தகவல் ஆகும். கோவிட முதல் இன்று வரை எங்கிருந்தோ வேலை செய்யும் ஆட்களுக்கு இது பெரிய பேரிடி.
8 . பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் விலை குறைப்பது மற்றும் சில பொருட்கள் இயற்கை சூழ்நிலை காரணத்தினால் விலை உயர்வு கொண்டிருந்த பொருட்களை சாதாரண விலைக்கு விற்க வேண்டும் என உத்ஹிரவிட்டது மட்டுமில்லாமல் பருவநிலை மாற்றம் ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.
9 . WHO – World Health Organization அமெரிக்கா ஒப்பந்தத்தை ரத்து செய்தார். கோவிட் காலங்களில் அதை சரியாக சமளிக்காமலும் இஸ்ரேல் – காஸா போரின் போது சில பணியாளர்களே இந்த ஹமாஸுக்கு உதவியது போன்ற விஷயங்களுக்காக இதை ரத்து செய்தது பெரிய அதிர்ச்சி. இதன் மூலம் பெரும் கொடையாளியாக இருந்த அமெரிக்கா விலகியது WHO க்கு பெரிய பேரிடி.
10 . நீதி துறை – பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி, இம்மிகிரேஷன் மற்றும் முக்கிய அரசு நிறுவனங்களில் இருந்து கொண்டே அமெரிக்காவின் அழிவு நோக்கி இட்டு செல்லும் DEEP STATE ஆக வழி வகுக்கும் ஆட்களை இனம் கண்டு கொண்டு அவர்களை கூண்டோடு சிலரை நீக்கயது மட்டுமில்லாமல் இன்னும் பலரை நீக்கும் முடிவை ஆரம்பித்து வைத்தது.