‘ஹிட் லிஸ்ட்’ -விமர்சனம்!

‘ஹிட் லிஸ்ட்’ -விமர்சனம்!

த்தைப் பாட்டு ஒன்றில் ஓஹோவென்று வாழ்வில் உயர்ந்து விடும் கேரக்டர்களை கோலிவுட்டுக்கு தந்தே ஜெயித்து செட்டிலான டைரக்டர் விக்ரமன் என்பவர் தனது மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்திருக்கும் படமே ஹிட் லிஸ்ட். அந்த விக்ரமனிடம் அசிஸ்டெண்ட்டாக இருந்த காரணத்தை நினைவுக் கொண்டே கே.எஸ்.ரவிகுமார் தயாரித்திருக்கும் இப் படத்தில் தனது உதவி இயக்குனர்கள் இரண்டு பேரை  டைரக்டர்களாக்கி இருக்கிறார். படத்தை பார்த்து முடித்த பின்னர் இப்படத்தை அந்த விக்ரமனோ அல்லது ரவிகுமாரோ இயக்கியிருந்தால் கொஞ்சமேனும் ரசித்திருக்க முடியும் – அதை ஏன் இருவரும் தவிர்த்தார்கள் என்றுதான் புரியமால் போனதுதான் மிச்சம்.

கதை நாயகனை சுற்றி வேண்டுமென்று ரொம்ப மெனக்கெட்டு இருக்கிறார்கள். அதாவது அருட்பெருஞ்ஜோதியான வள்ளலார் வழியில் சிறு உயிருக்கு கூட தீங்கு விளைவிக்கக்கூடாது என்ற எண்ணம் கொண்டவன். அதர்காகவே சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற கொள்கையும் கொண்டவர் விஜய் கனிஷ்கா(ஹீரோ), தனது அம்மா சித்தாரா, தங்கை ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். அந்த நாயகனின் வாழ்க்கையில் திடீரென்று நுழையும் முகமூடி அணிந்த ஆசாமி, அவரது அம்மா மற்றும் தங்கையை கடத்தி வைத்துக்கொண்டு, இந்த அப்புராணி புள்ளையை மிரட்டி இரண்டு கொலைகளை செய்யச் சொல்கிறார். அப்பாவியான விஜய் கனிஷ்காவை எதற்காக அவர் கொலை செய்யச் சொல்கிறார்?, முகமூடி மனிதரிடம் சிக்கிக்கொண்ட அம்மா, தங்கையை விஜய் கனிஷ்கா எப்படி மீட்கிறார்?, அந்த முகமூடி மனிதர் யார்? காவல்துறை உதவி என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைகள் தான் ‘ஹிட் லிஸ்ட்’ படக் கதை.

நாயகனாக அவதாரமெடுத்திருக்கும் விஜய் கனிஷ்கா தன்னால் முடிந்த அளவு ஸ்கோர் செய்கிறார். ஹீரோவை தூக்கிப்பிடிக்கும் சரத்குமார், படம் முழுவதும் வந்தாலும் முதல்பாதியில் டயலாக் மட்டும் பேசியபடி பயணிக்கிறார். ஆனால் இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் காட்சிகளோடு, முகமூடி மனிதர் யார்? என்பதை கண்டுபிடிப்பதன் மூலம் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விடுகிறார். சமுத்திரக்கனிக்கு சிறிய வேடம் என்றாலும், வழக்கம் போல் நல்ல விசயங்களை பேசும், நல்ல மனம் கொண்ட வேடத்தில் நடித்திருக்கிறார். டீனாக நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், வழக்கம் போல் வந்தார்.. போனார்..ஸ்மிருதி வெங்கட் சம்மந்தப்பட்டிருக்கும் பிரச்சனை மக்கள் எதிர்கொண்டவை என்பதால், அவரது காட்சிகள் மனதுக்கு நெருக்கமாக அமைந்திருப்பதோடு, அவரது நடிப்பு கண்கலங்க வைக்கிறது. அம்மா ரோலில் நடித்திருக்கும் சித்தாரா, தங்கையாக நடித்திருக்கும் அபி நக்‌ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, அனுபமா குமார், ராமச்சந்திரன் ஆகியோர் அளவான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். பாலசரவணன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி குறைவான காட்சிகள் வந்தாலும், சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள்.

சண்டை இயக்குனர்கள் விக்கி & ஃ பீனிக்ஸ் பிரபு கைவண்ணத்தில் அதிர வைக்கும் சண்டைக் காட்சிகள் நீட்! அருண் சங்கரின் கலை இயக்கமும் அதற்கு ஏற்றார் போல இருக்கிறது . இசையமைப்பாளர் சி சத்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு இசை அமைத்திருந்தாலும் ஆக்சன் படத்திற்கான அதிரடி காட்டத் தவறவில்லை

ஒரு புதுமுக இளைஞனுக்காக உருவாக்கியக் கதையில் இப்படி ஒரு சொதப்பல் கிளைமாக்ஸா என்று ஒவ்வொரு ரசிகனையும் அப்செட் ஆக்கி வெளியே அனுப்புகிறார்கள்.

மொத்தத்தில் இந்த ஹிட் லிஸ்ட் – கோலிவுட்டில் ஒன்று

மார்க் 2.25/5

error: Content is protected !!