டெல்லியில் வெப்ப அலை அதிகரிப்பு: பாதிப்படைந்தது விமான சேவை!

டெல்லியில் வெப்ப அலை அதிகரிப்பு: பாதிப்படைந்தது விமான சேவை!

இந்தியத் தலைநகர் டெல்லியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சமீபகாலமாக அதிகபட்சமாக 43.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பமாகும். இதன் காரணமாக விமான நிலைய ஓடுதளம் அதிக வெப்பமானதாகவும், விமான நிலையத்தில் மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாலும் விமானங்கள் புறப்படுவதில் 2 மணிநேரம் தாமதம் ஏற்பட்டது.

வட இந்தியா முழுக்க என்றாலும் டெல்லியிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக பலரும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், டெல்லி விமான நிலையத்தில் வெப்ப அலை காரணமாக இண்டிகோ விமானம் 2 மணி நேரம் தாமதமாக கிளம்பியுள்ளது. விமான நிலையத்தில் மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதால், மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், வெப்ப அலை காரணமாக ஓடுதளமும் அதிக வெப்பத்துடன் காணப்பட்டது. இந்த காரணங்களால் விமானத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் டெல்லியில் இருந்து மேற்குவங்கம் புறப்படும் இண்டிகோ விமானத்தில் பறக்க தயாரான பயணிகள், மதியம் 2:10 மணி முதல் மாலை 4:10 வரையில் விமானத்திலேயே தவித்துள்ளனர். சில பயணிகள் விமான பணிப்பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு மின்விநியோகம் மற்றும் அதிக வெப்பம் போன்ற பிரச்னைகள் சீரானதை அடுத்து, விமானம் புறப்பட்டு சென்றது.

error: Content is protected !!