இந்திய நடத்திய கே-4 அணுஆயுத ஏவுகணை சோதனை வெற்றி!
நம் இந்திய கடற்படை அண்மையில் பெரும் பலம் காட்டி, 3500 மைல் வரை செல்லும் அதி நவீன நீர்மூழ்கி ஏவுகனையினை , கே 4 ரக டார்பிடோ ரக ஏவுகனையினை ஏவி சோதித்து வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் உலகில் சக்திவாய்ந்த கடற்படை என்பதையும், உலகில் எந்த நாட்டையும் கடலடியில் இருந்து தாக்கும் வல்லமை இந்திய கடற்படைக்கு உண்டு என்பதையும், இனி இந்தியாவினால் உலகின் எந்த மூலையினையும் தொடமுடியும் என்பதையும் தேசம் உலகுக்கு அறிவித்துள்ளது,
இந்திய அரசு, நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியில், அதிநவீன ஏவுகணைகளை தயாரிப்பதிலும், விண்வெளி தொழில் நுட்பங்களிலும் தீவிரம் காட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாட்டின் ஒட்டுமொத்த ராணுவ திறன்களை நம் நாடு மேம்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், பல்வேறு வரம்புகளை கொண்ட ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 10 நாட்களுக்கு முன், ஒடிசா கடற்கரை பகுதியில் இருந்து, நீண்ட துார இலக்குகளை தாக்கும், ‘ஹைப்பர்சானிக்’ ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இந்நிலையில் நீர்மூழ்கிகளில் பல வகை உண்டு, இந்த சோதனை இந்திய தயாரிப்பான அரிகண்ட் நீர்மூழ்கியில் இருந்து செய்யபட்டது, அரிகண்ட் என்பது அணுசக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் கடல்நீர் முழ்கி கப்பல். டீசலில் இயங்கும் நீர்மூழ்கிகள் அதிக சப்தம் அதிர்வு கொடுப்பவை இவற்றை எதிராளிகள் எளிதில் அடையாளம் காண்பார்கள், இன்னொரு விஷயம் எரிபொருளுக்காக இது அடிக்கடி மேலே வரவேண்டும், வேறு வாய்ப்பில்லை. ஆனால் அணுசக்தி நீர்மூழ்கி அப்படி அல்ல, அவை பல மாதம் நீருக்கு அடியில் இருக்கமுடியும் ஏன் ஆண்டுகணக்கில் கூட நீடிக்கலாம் , ஓசை என்பது வராது, டால்பின் நீந்துவது போல சத்தமில்லாமல் செல்லும். இந்த பலம் முப்பக்கம் கடல்சூழ் இந்தியாவுக்கு அவசியம் . இந்த கே 4 ரக ஏவுகனைகள் அணுஆயுதம் வரை சுமப்பவை, இனி திடீடென தென் சீனடலில் இருந்து பசிபிக் கடலில் இருந்து சீனாவினை அடிக்கும் பலத்தை தேசம் பெற்றுவிட்டது.
இந்தியாவிடம் இப்போது அரிகன்ட், அரிகட் என இரு அணுசக்தி நீர்மூழ்கிகள் உண்டு, அடுத்த அணுசக்தி கப்பல் சில மாதங்களில் தயாராகும். இவ்வாரம் ஊட்டியில் ஜனாதிபதி அம்மையார் ராணுவ விழாவில் நாம் 100 நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி செய்கின்றோம், செயற்கை கோளை தாக்கும் ஏவுகனை முதல் கடலடி பலம் வரை நம்மிடம் உண்டு என வெற்றிகரமாக முழங்கியபோது இந்த அறிவிப்பு வந்திருக்கின்றது. இது சாதாரண அறிவிப்பு அல்ல, இந்திய தமிழகம் ஊட்டியில் நின்று இந்திய ஜனாதிபதி முழங்கும் போது கிழக்கே கடலில் சோதனை என்பது ஏதோ ஒரு செய்தியினை சூசகமாக உலகுக்கு இந்தியா சொல்வதை காட்டுகின்றது. இதே ஊட்டியில் விபத்தில் உயிரிழந்த இந்திய கூட்டுபடை தளபதி பிபின் ரவாத்தின் மரணத்துக்கான அஞ்சலியாக அது எடுத்து கொள்ளபடும்.
அணுசக்தி நீர்மூழ்கி, கே 4 ரக ஏவுகனை என தேசம் கடல்பாதுகாப்பில் முக்கிய இடம் பிடித்திருக்கின்றது. இந்நேரம் இந்திய சுதந்திரத்துக்காக அன்று ஜெர்மனில் இருந்து ஒரு பழைய டீசல் நீர்மூழ்கியில் ஏறி சுமார் 3 மாதம் கடலடிக்குள் அந்த நீர்மூழ்கியின் ஆபத்தான புகைக்குள் சிக்கி, படாதபாடுபட்டு ஜப்பானை அடைந்து படைதிரட்டிய நேதாஜி நினைவுக்கு வருவார்.இந்தியாவுக்கு அப்படியான நீர்முழ்கி அவசியம் என கனவு கண்டவர் அவர்தான். இந்த கே 4 என்பது அய்யா கலாமின் பெயரில் வைக்கபட்ட ஏவுகனை வரிசை. கே 1 , கே 2 , கே 3 , கே 4 என கே வரிசை ஏவுகனை எல்லாம் அவர் பெயரில் அமைய மத்திய அரசு செய்த மரியாதை. ஆக அந்த அப்துல் கலாமும் இந்நேரம் நினைவுக்கு வருவார்
அரிகண்ட் என்பது ஆறாயிரம் டன் எடை கொண்ட் மாபெரும் நீர்மூழ்கி கப்பல், இதன் இயக்கம் அணுசக்தி அந்த அணுச்க்திதான் கல்பாக்கம்,கூடன்குளம் இன்னும் நாட்டின் பல பாகங்களில் இருந்து பல வகைகளில் பெறபடுகின்றது, அணுவுலை இன்றி இவை சாத்தியமில்லை. இந்தியாவில் அணுசக்தி எதிர்ப்பு என கிளம்பும் கூட்டத்தின் உண்மையான நோக்கம் சுற்றுசூழல் அல்ல மாறாக இம்மாதிரி பலமான கருவிகளை தேசம் பெற்றுகொள்ள கூடாது எனும் வன்மம், தேசவிரோதம். இந்த செலவு சாதாரணம் அல்ல, பல்லாயிரம் கோடிகள் செலவு கொண்ட விஷயம் அது, அந்த ஏவுகனை தயாரிப்பும் சாதாரணமல்ல, பணக்கார நாடுகளுக்கே சாத்தியம்.மத்திய அரசு அந்த அளவு வலுவான பொருளாதாரமும், ராணுவத்துக்கு முழு சுந்தந்திரமும், டி.ஆர்.டி.ஓ அமைப்ப்க்கு முழு பலமும், இன்னும் மேக் இன் இந்தியா என பல நாடுகளுக்கு அழைப்பும் கொடுத்து இதை சாதித்திருக்கின்றது. நிச்சயம் இது பெரும் பலம், இன்று ரஷ்யாமேல் ஒரு கட்டத்துக்கு மேல் நோட்டாவால் செல்லமுடியவில்லை என்றால் அணுகுண்டு மிரட்டல் அல்ல, கடலடியில் ரஷ்யா வைத்திருக்கும் இந்த அபாய நீர்மூழ்கி பலம் அப்படி. அதை கண்டுதான் பதுங்குகின்றார்கள், அந்த கடலடி பலம் ரஷ்யாவிடம் அதிகம். அப்படியான பலத்தை பாரதமும் பெற்றுவிட்டது, சீனாவுக்கு இது பெரும் சவாலாக அமையும், தேசம் மிக பெரிய சக்தி பெற்ற நேரமிது
இதைத்தான் அன்றே பாரதி பாடினான் “ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம்” , அந்த சித்தனின் கனவு இன்று நிறைவேறுகின்றது.