கென்யாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருங்கள் – இந்திய தூதரகம் அறிவுறுத்தல்.

கென்யாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருங்கள் – இந்திய தூதரகம் அறிவுறுத்தல்.

ப்பிரிக்க நாடான கென்யாவில் வரியை உயர்த்த வழிவகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து கென்ய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.

நேற்று பாராளுமன்ற வளாகத்தில் நுழைந்து போராட்டம் மேற்கொள்ள முயன்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். இதில் சுமார் 31 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஓடியதால் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். தீ வைக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.


இதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகளை போலீசார் வீசினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர்.

வரி உயர்வு தொடர்பான மசோதா காரணமாக அந்த தேசம் முழுவதும் மக்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ‘7 டேஸ் ஆப் ரேஜ்’ என போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.கென்யாவில் நிலவும் பதட்டமான சூழலை கருத்தில் கொண்டு அத்தியாவசிய தேவையின்றி இந்தியர்கள் யாரும் வெளிவர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகிறோம். நிலைமை சீராகும் வரை போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்தடுத்த அப்டேட் தகவல்களை பெற மக்கள் இந்தியத் தூதரகத்தின் வலைதளம், சமூக வலைதள பதிவுகளை பார்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தூதரகத்தின் தரவுகளின்படி சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் கென்யாவில் இருப்பதாக தெரிகிறது.

error: Content is protected !!