எதிர்க்கட்சி துணைத் தலைவராகிறாரா கனிமொழி?

எதிர்க்கட்சி துணைத் தலைவராகிறாரா கனிமொழி?

திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், துணை தலைவர், பொருளாளர், கொறடா ஆகிய பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவராக கடந்த முறை டி.ஆர்.பாலுவும், துணைத் தலைவராக கனிமொழி, கொறடாவாக ஆ.ராசா ஆகியோர் இருந்தனர்.

எனவே மீண்டும் அவர்களே இந்த பதவிகளுக்கு நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில்., 40 தொகுதியிலும் வெற்றி பெற்றாலும் திமுக என்ன செய்து விடப் போகிறது என்று பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். எனவே, தேசிய அளவில் திமுகவுக்கு ஒரு அங்கீகாரம் பெறும் வகையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை திமுகவிற்கு கொடுக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் காங்கிரஸ் தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை நாடாளுமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை திமுகவிற்கு காங்கிரஸ் ஒதுக்கினால், நாடாளுமன்ற துணைத் தலைவராக கனிமொழி தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

15ஆவது மக்களவையில் எல் கே அத்வானி எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகித்தபோது சுஷ்மா சுவராஜ் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்தார்.
அவரைத் தொடர்ந்து கோபிநாத் முண்டே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி வைத்துள்ளார்.

இந்த வரிசையில் கனிமொழி பெயரும் இடம் பெறுமா? என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்..

error: Content is protected !!