ஹிந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை: ஸ்விஸ் கோர்ட் அதிரடி!

ஹிந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை: ஸ்விஸ் கோர்ட் அதிரடி!

வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பணியாட்களின் பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்துகொண்டு, வில்லாவை விட்டு வெளியேற விடாமல் தடுத்த வழக்கில், ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு ஸ்வீஸ் நீதிமன்றம், சிறை தண்டனை வழங்கி உள்ளது. இருவருக்கு 4.6 ஆண்டும், மற்ற இருவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி உள்ளது

பிரிட்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியான கோபிசந்த் ஹிந்துஜா, வங்கி, எண்ணெய், வர்த்தகம் உட்பட பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவரின் சகோதரர்களில் ஒருவரான பிரகாஷ், ஹிந்துஜா குழுமத்தின் பல்வேறு பணிகளை கவனித்து வருகிறார்.ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் சொகுசு மாளிகை உள்ளது. இங்கு பணியாற்றிய இந்திய பணியாளர்களை பிரகாஷ் ஹிந்துஜா (78), அவரின் மனைவி கமல் ஹிந்துஜா (75), மகன் அஜய், மருமகள் நம்ரதா ஆகியோர் கொத்தடிமை போல் நடத்தியதாகவும், அவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததுடன், குறைந்த சம்பளம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.அதுவும் ஸ்வீஸ் நாணயத்தில் வழங்காமல், இந்திய ரூபாயில் சம்பளம் வழங்கப்பட்டதாகவும், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை பார்க்க கட்டாயபடுத்தப் பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இது குறித்த வழக்கு ஜெனிவாவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்தது. அவர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்த நீதிமன்றம், ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்து சுவிட்சர்லந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பாதிக்கப்பட்ட 3 பணியாளர்களுடன் ஹிந்துஜா குடும்பம் சமரசம் செய்துகொண்டாலும், தொழிலாளர் நலன் விதிகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷ் ஹிந்துஜா மற்றும் அவரது மனைவி கமல் ஹிந்துஜா ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகியோரருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த தண்டனையை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஹிந்துஜா குடும்பம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 3 பணியாளர்களுடன் ஹிந்துஜா குடும்பம் சமரசம் செய்துகொண்டாலும், தொழிலாளர் நலன் விதிகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!