செல்போன் கட்டணத்தை 12% முதல் 25% வரையில் உயர்த்தியது ஜியோ!.

செல்போன் கட்டணத்தை 12% முதல் 25% வரையில் உயர்த்தியது ஜியோ!.

முன்னொரு சமயம் மிகக் குறைந்த விலையில் நெட் ஒர்க் வழங்கி வந்தது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம்.தொடக்கத்தில் இந்த ஜியோ இலவசமாக ” சிம் ” கொடுத்தான் .தொடர்ந்து 6 மாதத்துக்கு நெட் இலவசமாக கொடுத்தான் . இதை அடுத்து நம் நாட்டில் உள்ள பெரும்பாலானோர்” இந்த” ஜியோ பக்கம் ஒதுங்கினார்கள். ஒரு ஆண்டில் 24 கோடி சிம் சேல்ஸ் ஆனது. அதே நேரத்தில் எதிர் பார்ட்டி சிம் கம்பெனிகள் ஏகப்பட்டவை குளோஸ் ஆனது. இப்போது பாருங்கள்- வருடா வருடம்  ரீச்சார்ஜ் கட்டணத்தைக் கூட்டிக்கிட்டே போகிறார்கள். அந்த வகையில்  5G பயனர்களுக்கு புதிய விலையில்  அன்லிமிட்டட் ப்ளான்களையும் ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ளது. அதன்படி, செல்போன் ரீ-சார்ஜ் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய கட்டண உயர்வு வரும் ஜூலை 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ. 155 ஆக இருந்த மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 189 ஆக உயர்த்தப்படுகிறது. அதாவது, இந்த ரீசார்ஜ் கட்டணம் சுமார் 22% உயர்கிறது. ஜியோ நிறுவனம் 19 பிளான்களுக்கு கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

இது குறித்து ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் ,“மாதாந்திர கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.155 கட்டணம் ரூ.189 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதே போல் ரூ.239 ஆக இருந்த கட்டணம் ரூ.299 ஆகவும், ரூ.399 ஆக இருந்த கட்டணம் ரூ.449 ஆக அதிகரித்து உள்ளது.

17 ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்கள். தினசரி 1 ஜிபி நெட் வழங்கும் திட்டமானது ரூ. 209 ஆக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 249 ஆக உயர்த்தப்படுகிறது. ரூ. 239 ஆக இருந்த தினசரி 1.5 ஜிபி நெட் பேக் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 299 ஆக உயர்த்தப்படுகிறது.

ரூ. 299 ஆக இருந்த தினசரி 2 ஜிபி நெட் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 349 ஆக உயர்த்தப்படுகிறது. ரூ. 349 ஆக இருந்த தினசரி 2.5 ஜிபி நெட் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 399 ஆக உயர்த்தப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற 5 ஜி திட்டம் ஜூலை 3 ம் தேதி முதல் கிடைக்கும் எனவும், புதிய கட்டண விலை உயர்வு வரும் ஜூலை 3 ம் தேதி முதல் அமலுக்கு வரும்“ எனவும் தெரிவித்துள்ளது

error: Content is protected !!