கல்கி கிபி 2898 – விமர்சனம்!

கல்கி கிபி 2898 – விமர்சனம்!

டிரெய்லரில் என்ன பார்த்தீர்களோ அது தான் கதை. வேறு பெரிய ஆச்சர்யங்கள் எல்லாம் திரைக்கதையில் ஏதும் இல்லை.

புராணத்தில் சொன்ன ஒருவன் பிறக்கப் போகிறான். கடவுளை சுமக்கும் தாயை காப்பாற்ற வேண்டும். இதில் கொஞ்சம் மகாபாரதம் கலந்துக் கட்டி, அஸ்வத்தாமா அந்த உயிரை காப்பாற்ற சாகாமல் பல யுகங்களாக காத்திருக்கிறார். அந்த தாயைக் காப்பாற்ற அவர் முயல்கையில், நம்ம பவுண்டி ஹன்டர் பிரபாஸ் குறுக்கே வருகிறார். இறுதியில் என்ன நடக்கும் அது தான் தெரியுமே!

நாம் பலரும் கெஸ் பண்ணிய அனைத்தும் அப்படியே இருந்தது. படம் ஆரம்பித்த உடனே அந்த குழந்தையே நீங்க தானு சொல்லப்போறானுங்கன்னு தோணுச்சு..

பிரபாஸ் ஓட சாகோ, சலார் இரண்டு படத்திலயும் ஒரே க்ளைமாக்ஸ் தான் அதே தான் இதிலும் அந்த குழந்தையே நீங்க தான் 😢.

பிரபாஸ் ஓபனிங் சீன் எல்லாம் கொடூரம், பக்கா தெலுங்கு ரசிகர்கள் மட்டும் வேண்டுமானால் ரசிக்கலாம். படம் முழுக்க பற்பல காட்சிகளில் ஒரு அம்மெச்சூர்னெஸ் இருந்து கொண்டே இருந்தது . அதே சமயம் சில காட்சிகள் நன்றாக இருந்தது. அபாரம் எனும் சொல்லும்படி ஒரு காட்சி கூட இல்லை.

கேமியோவில் தான் ஆச்சர்யம்.. துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர், ராஜமௌலி, ராம் கோபால் வர்மா இவர்களுடன் பிரபாஸ் கொஞ்சம் எக்ஸண்டட் கேமியோ செய்துள்ளார். பாவம் பிரபாஸ் மிகவும் சோர்வாகவே இருக்கிறார். காட்சியில் இருக்கும் எனர்ஜி அவரிடம் இல்லை.

பிரபாஸை தெறிக்க விடும் அமிதாப்பச்சன் ஃபைட் ஆச்சர்யம். க்ளைமாக்ஸ் கமல் மறு உருவம் எடுப்பார் என்பது முன்பே தெரிந்தாலும் அதுவும் நல்ல சர்ப்ரைஸ் தான்.
முதல் முக்கால் மணி நேரம் ஒன்றுமே இல்லை கண்ணை மூடிக்கொண்டு தூக்கி எறியலாம்.Star Wars, Elysium, Mad Max என அத்தனை படத்தையும் அங்கங்கே சுட்டிருந்தாலும் மாகாபாரத புராணக்கதையை கட்டி அடிப்படை கதையில் கொஞ்சம் தப்பித்து விட்டார்கள்.

கேமரா, மூவி டிசைன், முக்கியமாக ஸ்டண்ட், செட் எல்லாவற்றிலும் பெரும் உழைப்பு தெரிகிறது. சிஜி இல்லாத ஒரு சீன் கூட படத்தில் இல்லை ஆனால் சிஜி மெச்சும்படியும் இல்லை ஆவரேஜ் தான்.

தமிழ் டப்பிங் செம்ம சொதப்பல் தவிர்ப்பது நல்லது.

மொத்ததில் இது கண்டபடி குறை சொல்லுமளவு மோசமான படமில்லை ஆனால் அதே அளவு கொண்டாடும்படியான படமும் இல்லை. 🥹

மார்க் 2.75/5

error: Content is protected !!