காவ்யாவை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்!

காவ்யாவை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்!

காவ்யா மாறன் குறித்து தோழர்களும், புரட்சியாளர்களும் வன்மம் கக்குகிறார்கள். SRH அணியின் முதலாளி சிறுதொழில் செய்கிறார்கள் அப்பாவும் மகளும் என்றெல்லாம். 2008 இல் IPL அறிமுகமான போது அவருக்கு வயது 16, கடந்த போட்டிகளின் போது கூட அவர் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை.இந்த IPL தொடர் முழுவதும் அவர் தனது அணியை திடல்களில் இருந்து உற்சாகப்படுத்தினார். எல்லாக் கிரிக்கெட் ரசிகர்களையும் போல தோல்வியடைந்த போது கலங்கினார். வெற்றியடைந்த போது கொண்டாடினார்.

நேற்றைய போட்டியில் கூட இறுதியில் KKR எளிதாக வெற்றி பெற்றபோது கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வெற்றி பெற்ற வீரர்களை நீண்ட நேரம் கைதட்டியபடி களத்தில் இருந்தார். போலி சாமியார்களைப் போல, போலி திராவிடர்கள், போலி இடதுசாரி செவ்விந்தியர்கள் உண்டு, சில போலி திராவிடர்களும், இடதுசாரி வேடதாரிகளும் மேடைகளில் பெரியார், அண்ணா, ஒடுக்கம், உழைக்கும் மக்கள் அது இதுவென்று முழக்கமிடுவார்கள். வீட்டிற்குள்ளும், மனதிற்குள்ளும் ஆதிக்க ஆண்டைகளாகளாகவும், மிகுந்த பிற்போக்குவாதிகளாகவும் இருப்பார்கள்.

அத்தகைய போலி புரட்சியாளர்கள் தான் காவ்யாவை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். இதில் என்ன கொடுமையென்றால் இவர்கள் பிறரை விடவும் மிகத் தீவிரமாக கிரிக்கெட் பார்ப்பவர்கள், படுமொக்கையாக கிரிக்கெட் முடிந்த பிறகும் நான்கைந்து நாட்களுக்கு பினாத்துவார்கள். கலாநிதி மாறனின் அரசியல் அல்லது தயாநிதி மாறனின் அரசியல் அல்லது திராவிட அரசியல் குறித்தும், எனக்குக் கூட மாற்றுக் கருத்துகள் உண்டு. அவற்றை நானும் முன்வைத்திருக்கிறேன். உங்களுக்கும் அப்படி இருந்தால் அந்த அரசியலைக் குறித்துப் பேசுங்கள். உரையாடுங்கள். விவாதம் செய்யுங்கள்.

அதை விடுத்து தனிப்பட்ட முறையில் பெண்ணுடல் என்கிற தங்கள் வழக்கமான காழ்ப்புணர்வுகளால் காவ்யாவையோ அல்லது எந்த கிரிக்கெட் அணியின் நிர்வாகிகளையோ விமர்சிப்பது கோழைத்தனமானது. திமுக குடும்பத்தின் வாரிசு என்கிற வன்மத்தை குழந்தைகளின் மீது காட்டுவீர்களேயானால் அதே திமுக குடும்பங்களின் உறுப்பினர்கள் என்ற முறையில் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

Cheer up Kavya Maran, You deserve as a Runner and win many hearts of the true Cricket Lovers.

கை.அறிவழகன்

error: Content is protected !!