லக்கி பெர்குசன் :4 ஓவர்களை மெய்டனாக வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை!

லக்கி பெர்குசன் :4 ஓவர்களை மெய்டனாக வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை!

ருபது அணிகள் பங்கேற்றும் விளையாடி வரும் 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் கடந்த 2-ம் தேதி தொடங்கி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 55 போட்டிகளுக்கு இதுவரை 38 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இவற்றில் ஆப்கானிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய எட்டு அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

நேற்றுகாலையில் நடைப்பெற்ற நேபாள் வங்கதேசம் போட்டியில் 21 டாட் பால்களை வீசி உலகக்கோப்பை சாதனை செய்திருக்கிறார் வங்கதேச வீரர் டான்சிம் ஹசன் சாகிப் என பதிவு செய்த போது இதனை முறியடிக்க சில வருடங்கள் ஆகும் என நினைத்தேன்.. ஆனால் 12 மணி நேரம் கூட நீடிக்கவில்லை, சாதனை தகர்த்தெரியப்பட்டது. இனி எவராலும் எட்டுவது கடினம் என்ற உயரத்தில் கொண்டு வைக்கப்பட்டுள்ளது.

பப்புவா நியூகினி அணிக்கு எதிராக பந்துவீசிய அதே கண்டத்தைச் சேர்ந்த நியூசிலாந்து அணியின் லக்கி பெர்குசன் வீசிய நான்கு ஓவரையும் மெய்டனாக வீசி கிரிக்கெட் உலகையே தன்பக்கம் திருப்பிவிட்டார். 24 பந்துகளையும் டாட் ஆக வீசி, 3 விக்கெட்களை சாய்த்துவிட்டார். இனி இச்சாதனை என்பது தகர்க்க முடியாதது.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் நேற்று (ஜூன் 17) நள்ளிரவு நடைபெற்ற 39வது லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து – பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் பெர்குசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் லக்கி பெர்குசன் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் ஒரு பந்துவீச்சாளர் ஒரு ஓவரை வீசினால் அது மெய்டன் ஓவராக கருதப்படும்.

அந்த வகையில் பெர்குசன் வீசிய 4 ஓவர்களில், அதாவது 24 பந்துகளில் பப்புவா நியூ கினியா அணி வீரர்கள் ஒரு ரன்கள் கூட எடுக்கவில்லை. வீசிய 4 ஓவர்களையும் பெர்குசன் மெய்டன் ஓவராக வீசியதுடன் 3 விக்கெட்டையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 20 ஒவர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு பந்துவீச்சாளர் 4 ஓவரையும் மெய்டனாக வீசியது இதுவே முதல் முறையாகும்.

ஒருவேளை இதே போல நான்கு ஓவர்களையும் மெய்டனாக வீசி நான்கு விக்கெட், ஐந்து விக்கெட் என யாராவது வந்தால் உலக அதிசயம் தான்!

error: Content is protected !!