மு.க.ஸ்டாலினுக்கெல்லாம் ராமதாஸை குறைத்து பேசுகிற தகுதி கிஞ்சித்தும் இல்லை!
மருத்துவர் அய்யாவைப் போன்றவர்கள் இல்லை என்றால், நாங்கள் எல்லாம் எப்படி இருப்போம் என்றே தெரியவில்லை. அவரைப் போன்றவர்களிடம்தான் நாங்கள் நிறைய கற்றுக் கொள்கிறோம். அத்தனை விவரங்களோடும் கூர்மையோடும் இருக்கக்கூடிய நபர்கள் இன்றைய அரசியலில் வேறு யாரும் இல்லை. மருத்துவர் அய்யா அவர்கள் மட்டுமே தமிழ் மண்ணுக்கான எல்லாவற்றையும் மிகத் துல்லியமாக முன்வைக்கும் மிகச்சிறந்த அரசியல்வாதியாக இருக்கிறார்… என சில வருடங்களுக்கு முன்பு காங்கிரஸின் முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் ஒருமுறை நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டு சொன்னார்கள்.
எல்லா நேரத்திலும் எல்லா விஷயத்திலும் தமிழர் நலனை, தமிழக நலனைக் கருத்தில் கொண்டே அரசியலை செய்து வருகிற மிகச்சிறந்த ஒப்பற்ற தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள். நாள்தோறும் வெளிவரும் அவரது அறிக்கைகள் ஒவ்வொன்றும் அவ்வளவு ஆழமான கருத்துக்களுடன் கூடியதாகவும் இத்தமிழ் மண்ணின் முன்னேற்றத்திற்கு வித்திடுவதாகவும் தமிழ் மண்ணின் அவலத்தை சாடுவதாகவும் தமிழ் மண்ணுக்கான பிரச்சனைகளிலே தீர்வு சொல்வனாகவும் பிற எல்லா அரசியல்வாதிகளுக்கும் முன்னோடியாகவும் இருந்து தமிழ் மண் பக்குவப்பட அவரது செயல்கள் ஒவ்வொன்றும் அமைந்திருப்பதை மாற்று அரசியல் கருத்துக் கொண்டோரும் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்கள். அரசியல் அறிவுடையோர், சமூகப் பார்வை கொண்டோர் ஒவ்வொருவரும் அறிவார்கள்.
வி.பி.சிங், சிரோமணி அகாலி தளம் கட்சியின் நிறுவனர் சிம் ரஞ்சித்சிங் மான், கன்ஷிராம், மாயாவதி, முலாயம் சிங் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், சோனியா காந்தி , அர்ஜுன் சிங், வாஜ்பேயி உள்ளிட்ட இன்னும் ஏராளமான அகில இந்திய தலைவர்களோடும் அரசியல் மற்றும் சமூக பங்களிப்பை மிகத் தீவிரமாக மேற்கொண்டவர். வட இந்திய அரசியல் தலைவர்களாலும் பெரிதும் மரியாதையாக பார்க்கப்படுகிறவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்.
தமிழகத்தின் மிகச்சிறந்த தலைவர்களோடும் எழுத்தாளர்களோடும் சமூக இயக்கங்களோடும் சமூக சிந்தனையாளர்களோடும் பல பேராசிரியர்களோடும் விஞ்ஞானிகளோடும் தமிழ்த் தேசிய புரட்சியாளர்களோடும் சாதனையாளர்களோடும் என்று தனது அரசியல் வாழ்வுக்கு அப்பாற்பட்டும் எல்லோரோடும் நெருக்கமான தொடர்பைக் கொண்டு எல்லாருடைய கருத்துக்களையும் கேட்டும் இத்தமிழ் மண்ணுக்கு அனைத்து பங்களிப்பையும் செய்து வருபவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள். இன்றைய தேதியில் அகில இந்திய அளவிலும் தமிழக அளவிலும் அறிவுத்தளத்தில், அரசியல் தளத்தில் அனுபவமிக்க முன்னோடியாக அறியப் படுபவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்.
மருத்துவர் ராமதாஸ் அவர்களின் இந்த பெருமைமிக்க குணங்களை எல்லாம் மிக நன்றாக அறிந்தவர் கருணாநிதி. அதனால்தான் கருணாநிதிக்கும் மருத்துவர் ராமதாசுக்கும் இடையில் அறிவார்த்தமான ஆழமான நட்புறவும் சக மரியாதையும் ஒருவருக்கொருவர் வழிகாட்டியும் ஆலோசனைகள் சொல்லியும் என தமிழ் மண்ணில் ஒரு நாகரீக அரசியல் செய்தார்கள். அரசியலுக்காய் கருணாநிதி தரம் தாழ்ந்த ஏராளமான செயல்களை செய்தாலும் கூட ராமதாஸ் சொல்கிற அனைத்து விஷயங்களையும் மிக உன்னிப்பாக கவனிப்பார். ராமதாஸ் அவர்கள் மீது எப்போதும் ஒரு பயத்துடனே கருணாநிதி இருப்பார். அவரது அறிக்கைகள் மறுநாள் என்னவாக இருக்கும் என்று ஒரு பயத்துடனும் அதற்கு தீர்வை உடனடியாக மேற்கொள்வதற்கான எத்தனிப்புடனும் எப்போதும் இருந்தார் கருணாநிதி.
கருணாநிதி நாள்தோறும் கவனிக்கிற முதல் செய்தியாக மருத்துவர் ராமதாஸின் அறிக்கைகளே இருந்தன என்பதை கருணாநிதியே சொல்லி இருக்கிறார். காரணம், அவை தமிழகத்தின் நலன் சார்ந்ததாகவும் ஆட்சியாளர்கள் மனதிற்கும் எட்டாத, ஆட்சியாளர்களின் மூளைக்கும் எட்டாத உயரத்தில் நின்று தமிழ் மண்ணின் விஷயங்களை பேசியும் அதற்கான தீர்வையும் மருத்துவர் சொல்வதை கருணாநிதி கூர்ந்து கவனித்து, முடிந்த வரையிலே அக்குறைகளை சரி செய்தும் அவற்றை நிறைவேற்றியும் கொடுத்தார் என்பது வரலாறு.
அது அரசியல் நாகரீகம் தெரிந்தவர்கள், அரசியல் பண்பு அறிந்தவர்கள் செய்கிற செயல்.
ஜனநாயக ஆட்சியில், அதிகாரத்தில் உள்ளவர்களைப் பார்த்து எந்த ஒரு குடிமகனும் ஆட்சியின் முறைகேடுகளை, சீர்கேடுகளை, குறைகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்டு பதில் பெறும் உரிமை உள்ளவனே! ஆனாலும் இந்த மாட்டு சமுதாயம் போல் இருக்கிற மந்தைக் கூட்டம், நாட்டில் நடக்கும் எந்த ஒரு இழிவையுமே கேட்க வக்கற்று, புத்தியற்று இருக்கும் சூழலில் யாரேனும், எந்த தலைவரேனும் இவர்கள் மீது அக்கறை கொண்டு ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து, இவர்களுக்கு விடிவு வேண்டி, இவர்களுக்கு வாழ்வு வேண்டி, இவர்கள் சார்பாக கேட்பதைப் பொருட்படுத்தி, அதற்கு தக்க பதிலையோ, வழியையோ, தீர்வையோ சொல்ல வேண்டும். ஆனால் அப்படி எதுவும் சொல்லாமல் ‘ ‘ வேறு வேலை இல்லை அவருக்கு ‘ என்று ஒரு தலைவன் பதில் சொல்கிற மனப்பாங்கு கேவலமாக அருவருப்பாக அசிங்கமாக பார்க்கக் கூடியது.
தலைவன் என்பவன் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் பதில் அளிக்க தெரிந்திருக்க வேண்டும். எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். முக்கியமாக, யார் எந்த கேள்விகள் கேட்டாலும் பதில் சொல்லக்கூடிய அளவுக்கு பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கான முனைப்புகளோடு இருக்க வேண்டும் முதலிலே. கருணாநிதியிடம் அத்தகைய பண்பு இருந்தது. திறமை இருந்தது. பொறுமை இருந்தது.
ஆனால் ஸ்டாலினிடம் அதையெல்லாம் நம்மால் எதிர்பார்க்க முடியவில்லை. தீப்பொறி ஆறுமுகம், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, வெற்றி கொண்டானுக்கு இணையான செய்கைகளையே தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு ஸ்டாலினும் செய்கிறார் என்பது தான் அதிர்ச்சியாக இருக்கிறது. தரம் தாழ்ந்த பேச்சுக்கள், நாகரீகம் இல்லாத பேச்சுக்கள், அசிங்கமான பேச்சுக்கள், எல்லை மீறிய பேச்சுக்கள், ஆணவப் பேச்சுகள், திமிர் பேச்சுகள் போன்ற எது ஒன்றிலும் அடங்கி விடக் கூடிய ஒன்றாக இருக்கிறது ஸ்டாலினின் நேற்றைய பதில்! நடந்து கொண்ட விதமும் கூட. ஸ்டாலினின் இந்த செயலைக் கண்டு அறிவுலகம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. ஸ்டாலினின் நடத்தையையும் ஆட்சியின் அவலத்தையும் கண்டு இழிவாய்ப் பார்க்கிறது தமிழ் சமூகம்.
2006 இல் ஜெயலலிதா அவர்கள் கருணாநிதி முகத்திலே காறித் துப்பாத குறையாக மைனாரிட்டி அரசு மைனாரிட்டி அரசு என்று அசிங்கப்படுத்தி கறை பூசிய போதெல்லாம் ஐந்து ஆண்டுகளும் கருணாநிதிக்கு முட்டுக் கொடுத்து அரசை காபந்து பண்ணிக்கொண்டு வந்து கடைசி வரை கொண்டு சேர்த்தவர் மருத்துவர் ராமதாஸ் என்ற நினைப்பு ஸ்டாலினுக்கு இல்லாதது ஒன்றும் பெரிய வியப்புக்குரியது அல்ல. ஏனெனில் நன்றி உணர்வு என்றால் என்னவென்று தெரியாதவர் ஸ்டாலின். தம்மை சர்வாதிகாரி என்று பெருமையுடன் நினைத்துக் கொண்டிருப்பவர்.
கருணாநிதி இறந்த அன்று இரவு 11 மணிவாக்கிலும் கூட ஸ்டாலினும் கனிமொழியும் தயாநிதி மாறனும் என்று ஒட்டுமொத்த குடும்பமே மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கிடைக்குமா என்று ஏங்கி ஏங்கி அழுது கொண்டு… அண்ணனும் தங்கையும் கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் கூட மிக கண்ணியமாக, மிகப் பெருந்தன்மையுடன் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தமது கட்சியின் வழக்கறிஞர் திரு.பாலுவை விட்டு தமது கட்சி சார்பில் போடப்பட்டிருந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டு கருணாநிதியை மெரினாவில் புதைப்பதற்கு இடப் பிச்சையும் போட்டார் என்பதையும் மறந்து இன்றைக்கு நாகரிகமற்று மருத்துவரைப் பார்த்து மிக இழிவாக இப்படி ஸ்டாலினால் நன்றி மறந்து பேச முடிகிறது என்றால் அவருடைய பிரக்ஞை பற்றி தமிழ்ச் சமூகம் கவலை கொள்ள வேண்டி ஆகிறது.
அமெரிக்க நீதிமன்றத்தில் நமது அரசையும் சுட்டி கையூட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2250 கோடி ரூபாய் கையூட்டு கொடுக்கப்பட்ட வழக்கிலே சம்பந்தப்படுகிற கௌதம் அதானி, முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லத்திற்கே வந்து சென்றிருக்கிறார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டு , அதன் பிறகு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக எப்பொழுதும் செயல்படுகின்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் அதைக் குறிப்பிட்டு அதனுடைய உண்மை தன்மையை வெளியிடுமாறும், மின்வாரியத்திற்கும் SECI க்குமான ஒப்பந்த விபரங்களை வெளியிடுமாறும் தவறு இருக்கின்ற பட்சத்தில் அவற்றைக் களைய நடவடிக்கை வேண்டும் என மிக விரிவாக கேட்டுக் கொண்ட அந்த அறிக்கை ஸ்டாலினின் ஆட்சியின் நலன் சார்ந்தது என்பதை ஸ்டாலினின் குறுமனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது அல்லது அவருடைய அறிவுக்கு, அவருடைய புத்திக்கு இத்தகைய செயல்களின் தன்மைகள் புரியவில்லை என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் முதலமைச்சராகிய தமக்கு கொம்பு முளைத்திருப்பதாகவே ஸ்டாலின் கருதி கொண்டிருக்கிறாரோ என்னவோ!
தமிழகம் சார்ந்த நலனில் அக்கறை கொண்டிருக்க கூடிய ஒரு பெருந்தலைவர் கேட்கிறார். அதற்குரிய பதிலை உரியவர்களிடம் கேட்டு சொல்வதாக கூட அந்த பேட்டியில் சொல்லி இருக்கலாம் ஸ்டாலின். ஆனால், அத்தகைய ஒரு பொறுமையற்ற, கேள்வி கேட்டாலே கோபப்படுகிற மனநிலையோடு இருந்ததும், அரசை திறம்பட நடத்துவதற்கான செயல்களை அறிக்கைகள் மூலமும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வழி நடத்திக் கொண்டு இருக்கிறார் என்ற நினைப்பு துளியுமற்று ஸ்டாலினால் ஒரு நாலாந்தர தொண்டன் போல, மிக எளிதாக ஒரு பெரும் தலைவரை பேச முடிகிறது என்றால் அவமானமாக தம்மை ஸ்டாலின் கருத வேண்டும்.
ஸ்டாலினின் ஏனோ தானோ பேச்சுக்களையும் திக்குவாய் உளறல்களையும் கூட எடுத்து ஆள்வதற்கு இங்கு தயங்கிக் கொண்டேதான் தவிர்க்கிறோம். அவருக்கெல்லாம் ராமதாசை குறைத்து பேசுகிற தகுதி கிஞ்சித்தும் இல்லை. ஸ்டாலினை விட எத்தனையோ கொம்பாதி கொம்பர்களும் கூட ராமதாஸ் அவர்களின் அறிக்கைகளுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்து ஆழ்ந்து படிப்பார்கள். ஒருவரும் மறுத்து பேச முடியாதவாறு அவரது அறிக்கைகள் இருக்கும் என்பதையும் எல்லோரும் ஒத்துக் கொள்வார்கள்.
தினமும் அவர் அறிக்கை வெளியிடுகிறார் என்றால் அவையெல்லாம் அரசுக்கான யோசனைகள். தமது அரசை திறம்பட நடத்துவதற்கான யோசனை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் என்று இருப்பதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் படித்திருக்க மாட்டார்!
கருணாநிதியும் சொல்லிக் கொடுக்க தவறிவிட்டார் போல! கருணாநிதிக்கு மருத்துவரின் அருமை புரிந்த காரணத்தால் தான் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் குறளையும் சுட்டி தைலாபுரத்து தைலம் என்றும் உவமைப்படுத்தி மருத்துவரை தமிழக அரசின் மைய புள்ளியாக கருதியது எல்லாம்.
பிற தலைவர்களை மதிக்கின்ற போக்கை ஸ்டாலின் கற்றுக் கொள்ள வேண்டும். குறைகளை சுட்டிக் காட்டினால் அதை தாங்கிக் கொள்ளுகிற மனப்பக்குவம் உள்ளவராக தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசை ஆக்கபூர்வமான முறையில் வழிநடத்த ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும். வெறும் வெத்து வேட்டு அரசியலை பண்ணிக் கொண்டிருக்க வேண்டிய காலம் அல்ல இது. இவருடைய அரசிலே ஏகப்பட்ட நிர்வாக சீர்கேடுகள், ஊழல்கள், அராஜகங்கள், வன்முறைகள், கொலைகள், பாலியல் வக்கிர நிகழ்வுகள் என்று எவ்வளவோ சுட்டிக்காட்டியும் கூட, குற்றவாளிகளுக்கு மீண்டும் மீண்டும் முக்கிய இடங்களை கொடுத்துக் கொண்டிருப்பதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2026லே அதற்கான பலனை அறுவடை செய்வார் ஸ்டாலின்.
சமூக பொறுப்பில்லாத இந்த நாய் மக்கள் எக்கேடும் கெட்டொழியட்டும் என்று மருத்துவர் ஐயா அவர்கள், இந்த கழிசடை அரசியலில் இருந்தும் இத்தகைய அறிவிலிகளிடமிருந்தும் ஒதுங்கி இருப்பது அவருடைய மரியாதைக்கும் அவரை உயிராய் நேசிக்கிற தொண்டர்களின் மனம் புண்படாமல் இருப்பதற்கும் வாய்ப்பாக அமையும்.
சாக்கடைகள் நாறத்தான் செய்யும்