மாரியப்பன் தங்கவேலு -உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்!

மாரியப்பன் தங்கவேலு -உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்!

ப்பானில் நடந்து வரும் பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவருக்கான உயரம் தாண்டுதல் டி63 போட்டியில் 1.88 மீட்டர் தூரம் எறிந்து மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார்.

ஜப்பானில் கோபி நகரத்தில் பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்64 பிரிவில் நடப்பு பாராலிம்பிக் சாம்பியனான இந்தியாவை சேர்ந்த சுமித் ஆன்டில் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு சகஇந்தியர் சந்தீப் சவுத்ரி 60.41 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலமும், இலங்கையின் துலான் கொடித்துவக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது.

இதேபோல்,ரியோ பாராலிம்பிக் சாம்பியனான மாரியப்பன் உலக தடகள சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (T63 பிரிவு) போட்டியில் 1.88 மீட்டர் தாண்டி இவர் தங்கப் பதக்கம் வென்றார்.

மாரியப்பன் தங்கவேலு அமெரிக்க வீரர்களான எஸ்ரா ஃப்ரீச் (1.85 மீ) மற்றும் சாம் க்ரூ (1.82 மீ) ஆகியோரை முந்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மற்ற இரண்டு இந்திய வீரர்களான வருண் பாடி மற்றும் ராம்சிங்பாய் படியார் ஆகியோர் முறையே 4 மற்றும் 7வது இடங்களைப் பிடித்தனர். வருண் பாடி பதக்கத்தைத் தவறவிட்டார். ஆனாலும் அவர் 1.78 மீ உயரம் தாண்டி 4ம் இடம் பிடித்ததால் பாரிஸ் பாராலிம்பிக்கில் விளையாட தகுதிபெற்றுள்ளார்.பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளுக்கு ஏற்கெனவே இந்தியாவின் சார்பில் மாரியப்பன் தங்கவேலு மற்றும் ஷைலேஷ் குமார் ஆகியோர் தகுதிபெற்றுள்ள நிலையில், இப்போது மூன்றாவது வீரராக வருண்பாடி தகுதி பெற்றுள்ளார்.

இதுவரை இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இதேபோல், சீனா 15 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலமும், பிரேசில் 14 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!