ஒடிசா முதல்வராக பதவியேற்கிறார் மோகன் சரண் மாஜி!

ஒடிசா முதல்வராக பதவியேற்கிறார் மோகன் சரண் மாஜி!

டிசாவில் பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக மோகன் சரண் மாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து புதிய முதல்வராக நாளை அவர் பதவியேற்கவுள்ளார்.மேலும் கே.வி.சிங் தியோ, பிரவாதி பரிதா ஆகியோர் துணை முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் பாஜக அரசு பதவியேற்கும் விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Mohan Charan Maji takes oath as Chief Minister of Odisha!

அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலோடு ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. இதன்மூலம், தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பாஜக பெற்றது. அந்தக் கட்சி முதல்முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக பாஜக-வால் அறிவிக்கப்பட்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோர் இன்று புவனேஸ்வருக்கு வருகை தந்தனர்.

அவர்கள் இருவரும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய தலைவர்களை தனித்தனியே சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தனர். இதையடுத்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம், ராஜ்நாத் சிங் மற்றும் பூபேந்தர் யாதவ் முன்னிலையில் நடைபெற்றது. இதில், மோகன் சரண் மாஜி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.4 முறை சட்டமன்ற உறுப்பினரான மோகன் சரண் மஜி, மாநிலத்தின் பழங்குடியின மக்களின் தலைவராக உள்ளார். ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கியோஞ்சர் தொகுதியில் போட்டியிட்டு 11 ஆயிரத்து 577 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாராக்கும்

error: Content is protected !!