நடிகை நமீதாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு!

நடிகை நமீதாவுக்கு  கல்யாணம் ஆயிடுச்சு!

எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நமீதா. அதனைத் தொடர்ந்து ‘ஏய்’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘சாணக்யா’, ‘கோவை பிரதர்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இத்தனைக்கும் குஜராத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்திருந்தாலும் மச்சான்ஸ் என்ற சொல்லின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நமீதா. ஆனாலும் அண்மைக் காலமாகப் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார். பிக் பாஸ் வீட்டில்ரிந்து வெளியேறிய பிறகும் நமீதாவுக்குப் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனிடையே வ் நமீதா தனது காதலரான வீராவைத் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான ரைஸா அறிவித்திருந்தார். திருப்பதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன்தினம் நமீதா – வீராவின் நிச்சயதார்த்தமும், அதன் பின்னர் மெஹந்தி நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இந்த நிலையில் நமீதா அவர் காதலர் வீரேந்திர சவுத்ரி திருமணம் திருப்பதியில் இன்று காலை நடந்தது. இன்று காலை 6.30 மணிக்கு வீரேந்திர சவுத்ரி இந்து முறைப்படி தனது காதலி நமீதா கழுத்தில் தாலி கட்டினார். அப்போது அங்கிருந்த உறவினர்களும், நண்பர்களும் அட்சதை, மலர்கள் தூவி மணமக்களை வாழ்த்தினார்கள்.மணமக்களை சரத்குமார், ராதிகா சரத்குமார், காயத்ரி ரகுராம், சக்திவேல் வாசு, அரீஷ்குமார், கணேஷ், ஆர்த்திகணேஷ் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கோவிலுக்கு வந்து மணமக் களை வாழ்த்தினர். குடும்பத்தினரும் மண மக்களை வாழ்த்தினார்கள். மணமகள் நமீதா, மணமகன் வீரேந்திர சவுத்ரி ஆகியோர் பெற்றோர், உறவினர்களின் கால்களை தொட்டு ஆசி பெற்றனர்.

திருமணம் முடிந்ததும் நமீதா, அவருடைய கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது நமீதா கூறியதாவது:-

எனது கணவர் வீரேந்திர சவுத்ரி என்னுடைய நல்ல நண்பர். என்னை நன்றாக புரிந்து கொண்டவர். நானும் அவரை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு மணமக்கள் ஆகி இருக்கிறோம். திருப்பதியில் எங்கள் திருமணம் இந்து முறைப்படி நடந்து இருக்கிறது. எங்கள் வாழ்க்கை நல்லபடி அமையும் என்று நம்புகிறேன்.இவ்வாறு நமீதா கூறினார்.

 

நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி கூறியதாவது:-

நமீதா என்னிடம் நீண்ட நாட்களாக நட்புடன் பழகினார். நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தோம். நமீதா சிறந்த நடிகை.அவர் தொடர்ந்து நடிக்க எந்த தடையும் இல்லை. அவருக்கு பிடித்தமான நல்ல வேடங்கள் அமைந்தால் எந்த மொழி படங்களிலும் நடிப்பார். எப்போதும் அவர் சுதந்திரமாக இருப்பார். இவ்வாறு வீரேந்திர சவுத்ரி கூறினார்.

error: Content is protected !!