‘நாசா’ மையம் சூரியனில் ஆய்வு நடத்த முடிவு!

‘நாசா’ மையம் சூரியனில் ஆய்வு நடத்த முடிவு!

பால்வெளி மண்டலத்தில் 10000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன. சூரியனும் ஒரு நட்சத்திரம்தான், நடுத்தர அளவுடைய நட்சத்திரம். என்ன ஒரே வித்தியாசம், அது பூமிக்கு மிக அருகில் உள்ளது. ஆனாலும் அதன் நிறம் வெள்ளைதான். மஞ்சள் குள்ள நட்சத்திரம் என்று இது வகைப்படுத்தப்  பட்டுள்ளது. சூரியனுக்குள் ஹைட்ரஜன் (73%), ஹீலியம் (25%) வாயுக்கள் எரிந்துகொண்டிருக்கிறது சூரியனுக்குள் ஏற்படும் அணு பிணைவுக்கு எரிபொருளாக ஹைட்ரஜன் (ஒவ்வொரு விநாடியும் 400 கோடி டன்) பயன்படுகிறது. இந்த வேதிவினையின்போது ஹீலியம் வாயு உருவாகிறது. இந்த வேதிவினையின் காரணமாகத்தான் அளவு கடந்த வெப்பம் வெளியாகிறது. சூரியனின் வயது 450 கோடி ஆண்டுகள். சூரியனில் இருக்கும் ஹைட்ரஜனில் பாதி எரிந்துவிட்டது. இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்கு சூரியன் இதேபோல எரிந்துகொண்டிருக்கும்.

சூரிய ஒளி சூரியனிலிருந்து புறப்பட்டுப் பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகின்றன. சூரியனில் இருந்து தான் பூமி அனைத்துசக்திகளையும் பெறுகிறது.பூமியில் இருந்து ஒரு சாதாரண விமானத்தில், அதன் வழக்கமான வேகத்தில் சென்றால் (மணிக்கு 645 கி.மீ. வேகம்) சூரியனை அடைய 20 ஆண்டுகள் ஆகும்.

இந்நிலையில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் சூரியனில் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. அதற்காக ‘எஸ்பிபி’ (சோலார் புரோப்பிளஸ்) என்ற விண்கலத்தை உருவாக்கி வருகிறது. அடுத்த ஆண்டு (2018) கோடை காலத்தில் இந்த விண்கலத்தை சூரியனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இது சூரியனின் ‘கரோனா’ எனப்படும் மேல்பரப்பை ஆய்வு செய்கிறது. இது சூரியனின் உள்புற பரப்பை விட பல நூறு மடங்கு அதிக வெப்பமாகும். அதாவது 5 லட்சம் டிகிரி செல்சியஸ் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூரியனில் நடத்தப்படும் ஆய்வு குறித்த விளக்கங்களை ‘நாசா’ மையம் நேற்று இரவு 8.30 மணிக்கு ‘நாசா’ டெலிவி‌ஷன் மற்றும் தனது இணையதளத்திலும் ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்க்து

error: Content is protected !!