ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

ங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக நீடிக்கும் என ரிசர்வ் வக்கி சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.அத்துடன் தொடர்ந்து எட்டாவது முறையாக ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி, வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது.

ஆர்பிஐ நிதி கொள்கைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் விவரித்து அவர் பேசும்போது,” ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை. நிதி கொள்கைக்குழு கூட்டத்தில் நான்கிற்கு இரண்டு என்ற மெஜாரிட்டியில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும். அதனால் எஸ்டிஎஃப் 6.25 சதவீதமாகவும், எம்எஸ்எஃப் 6.75 சதவீதமாகவும் தொடரும். உலக நாடுகள் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்தியா வளர்ச்சிக் கண்டு வருகிறது. இருந்தாலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்” என்றார்.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 5-ம் தேதி அன்று இந்த குழு கூடியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!