“படிக்காத பக்கங்கள்” – விமர்சனம்!

“படிக்காத பக்கங்கள்” – விமர்சனம்!

எஸ் மூவி பார்க் & பெளர்ணமி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “படிக்காத பக்கங்கள்”. செல்வன் மாதப்பன் எழுதி இயக்கி இருக்கிறார். யாஷிகா ஆனந்த், ப்ரஜன், மரியம் ஜார்ஜ், லொள்ளு சபா மனோகர், பாலாஜி, முத்து மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்., டாலி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார். சரண் சண்முகம் மற்றும் மூர்த்தி படத்தொகுப்பு பணிகளை கவனித்திருக்கின்றனர்.

கதை என்னவென்றால் நடிகை ”ஸ்ரீஜா”-வாகவே நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த் படப்பிடிப்பிற்காக சேலம் ஏற்காடு பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்க வருகிறார். அவரை பேட்டி எடுக்க ஒரு லோக்கல் சேனலில் இருந்து ஒரு ரிப்போர்ட்டர் வருகிறார். பேட்டி தொடங்கியதும் குதர்க்கமான கேள்விகளைக் கேட்டு யாஷிகாவைப் கோபப்படுத்துவதோடு அவரை அடித்து துன்புறுத்த துவங்குகிறார். மேற்கொண்டு என்ன நடந்தது என்பது “படிக்காத பக்கங்கள்” படத்தின் மீதி கதை.

பெண்களை நம்ப வைத்து உறவு கொள்ளும் போது ஆபாசப்படம் எடுத்து அதை வைத்து மிரட்டி அவளிடம் பணமும் பிடுங்குவதோடு பலரிடமும் காமத்துக்கு அனுப்பி அதை வைத்து பல வகையிலும் பணம் அதிகாரம் என்று வாழும் கும்பல் பற்றிய படம் .  பொள்ளாச்சி பாலியல் குற்றங்களின் இன்ஸ்பிரேஷனில் எழுதி இருக்கிறார்களாம்.

படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி இந்த படிக்காத பக்கங்களை படிக்கத்தக்க வகையில் கவர்ச்சியாகவும் அழகாக கொடுத்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.. இந்த படத்திலும் நடிகை ஸ்ரீஜா என்ற பெயரில் நடிகையாக வருகிறார்.. கவர்ச்சியிலும் நடிப்பிலும் மிரட்டி இருக்கிறார் . கதையின் நாயகனாக நடித்திருக்கும் பிரஜின் இடைவேளை நெருங்கும்போது தான் வருகிறார்.. வந்த பிறகு நாயகிக்கு உதவும் கேரக்டரில் தன்னால் முடிந்த உதவியை செய்து இருக்கிறார்..இவர்களுடன் வில்லன் கும்பலைச் சேர்ந்த முத்து, எம்எல்ஏ உள்ளிட்ட பலரும் கதை போகையே புரியாமல் சின்னபுள்ளைத்தனமாக நடித்து ஒட்டு மொத்த படத்தையே கெடுத்து விட்டார்கள்

சைக்கோ வில்லன் முத்துக்குமரன் பரவாயில்லை என்று சொல்ல வைத்து விடுகிறார்.. அதுபோல ஆதங்க பாலாஜி மற்றும் தன்ஷிகா உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார்… பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணிக்கிறது.. படத்தை இரண்டு மணி நேரத்திற்குள் எடிட்டிங் செய்து செய்திருக்கின்றனர்.. இதை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதுபோல படத்தின் ஒளிப்பதிவும் பாராட்டத்தக்க வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது!.

இந்த படத்தை எஸ் மூவி பார்க் & பவுர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

பொதுவாகவே நாம் சில செய்திகளை நாளிதழ்கள் படிக்கும்போது ஒரு விபத்து ஒரு கற்பழிப்பு ஒரு கொலை என்ற சம்பவங்களை படிப்போம்.. இவை அனைத்தும் பெரிய எழுத்துக்களில் தலைப்பு செய்தியாக வந்திருக்கும் ஆனால் அதை எடுத்து ஒரு சில தினங்களில் இது தொடர்பான கைது விசாரணை அல்லது முன்ஜாவின் வழக்கு வாபஸ் என்ற செய்திகள் சிறிய செய்தியாக போடப்பட்டிருக்கும். ஆனால் இவைதான் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.. இதை படிக்காத பக்கங்கள் என்ற பெயரில் வசனங்களாக வைத்திருக்கிறார் இயக்குனர் செல்வம் மாதப்பன். நாம் படித்த பக்கங்களை விட படிக்காத பக்கங்கள் நிறைய இருக்கிறது அதை படிக்க வேண்டும் என்ற சிந்தனையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

ஆக இந்த படிக்காத பக்கங்கள்.. – போரடிக்கவில்லை

error: Content is protected !!