பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் வேலைவாய்ப்பு!

பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் வேலைவாய்ப்பு!

ம் நாட்டில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதில் முன்னணியில் உள்ள ஐடி நிறுவனங்களில் ஒன்று தான் காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷன்(Cognizant Technology Solutions Corporation).சுருக்கமாக காக்னிசண்ட் என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் தமிழகத்தில் சென்னையில் செயல்பட்டு வருகிறது. காக்னிசண்ட் நிறுவனத்தை பொறுத்தமட்டில் நிதி, சுகாதாரம், சில்லறை வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் தேவையான டெக்னாலஜி சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் அங்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் நிறுவனத்தில் எம்டிஎஸ் டெவலப்பர்/கான்ஃபிகுரேட்டர் (MTS Developer/ Configurator) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எம்டிஎஸ் கான்ஃபிக்ஸ் அண்ட் ரூட்டிங் மற்றும் ப்ராசசிங் ரூல்ஸ் (MTS Configs & Routing and processing rules)-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.மேலும் டேட்டாபேஸ்களான ENTIA, Oracle, DB2 மற்றும் IBM MQ-வில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Troubleshooting and setup of MTS Congfiguratin-ல் எம்டிஎஸ் ப்ராசசஸ், எம்டிஎஸ் லைன்ஸ், எம்டிஎஸ் க்யூஸ், ரிமோட் ரெக்கார்ட்டஸ், எம்டிஎஸ் டேட்டாபேஸ் REL & AUX அனுபவம் கொண்டிருக்க வேண்டும். எம்டிஎஸ் வீடியோ, வெப் யூஐ, UPF அனுபவம் இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி எம்டிஎஸ் இன்ஸ்டாலேஷன், ஏசிஐ எம்டிஎஸ்-ல் Functional அல்லது டெக்னோ Functional கன்சல்டன்ட் ஆக 4 ஆண்டு அல்லது அதைவிட கூடுதல் வருடம் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். COBOL பற்றி தெரிந்திருப்பதோடு, லினக்ஸ், UNIZ/Ai பிளாட்பார்ம் – VI, Unix Commands, Shell Scripting பற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பணிக்கான சம்பளம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியா முழுவதும் உள்ள காக்கனிசண்ட் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். அதன்படி அதிர்ஷடம் இருந்தால் சென்னையில் உள்ள காக்கினசண்ட் நிறுவனத்தில் கூட பணி வாய்ப்பு கிடைக்கும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Cognizant இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் இந்த பணியை விரும்புவோர் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.

பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய

ஆந்தை வழிகாட்டி / வேலைவாய்ப்பு

error: Content is protected !!