தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்- இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்- இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

ந்தியா முழுவதும் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது வட மாநிலங்கள் பலவற்றிலும் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டு வந்தனர்.இந்நிலையில் கடந்த மே 30ஆம் தேதி கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தென் தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் அவ்வப்போது வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இந்திய வானிலை மையம் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் தமிழகத்தில் அதி கன மழை பெய்யும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. மேலும் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

இது போல் கேரள மாநிலத்திலும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. மலப்புரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூரில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கேரள கடற்கரையில் கள்ளக்கடல் நிகழ்வு இன்று இரவு 11.30 மணி வரையும், தமிழக கடற்கரையில் நாளை இரவு 7 மணி வரையும் நிலவும் என்றும் இதனால் கடல் சீற்றத்துடன் உயரமான அலைகள் எழ வாய்ப்புள்ளதாக தேசிய கடல்சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!