நம்ம வீட்டில் அதிகம் கிருமிகள் உள்ள பொருள் – டி வி ரிமோட்- அதிர்ச்சி ஆய்வு தகவல்!

நம்ம வீட்டில் அதிகம் கிருமிகள் உள்ள பொருள் – டி வி ரிமோட்- அதிர்ச்சி ஆய்வு தகவல்!

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமுள்ள வீடுதான். சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடு தான் – இது பிரபலமான பாடல் வரி. இதே கருத்தை உலக சுகாதார கவுன்சில்  கூடஆய்வு செய்து கூறியுள்ளது. மனிதர்களை தாக்கும் 90 சதவீத நோய்க்கிருமிகள் வெளியே இருந்து வருவதில்லை. எல்லாம் வீட்டுக்குள் இருந்துதான் நம்மை தாக்குகின்றன. இதற்கு காரணம் வீட்டு உபயோகப் பொருட்கள் அசுத்தமாக இருப்பதுதான். அதிலும் கழிப்பறையைவிட 20 மடங்கு அசுத்தமானது உங்கள் டிவி ரிமோட் என்பது தெரியுமோ? சொன்னால் நம்ப முடியாமல்தான் இருக்கும், ஆனால், அதுதான் உண்மை என்று தெரிவிக்கிறது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்று.

சமையலறையில் பாத்திரங்கள் கழுவும் இடம், கழிவறை, குளியலறை ஆகியவற்றை நாம் அடிக்கடி சுத்தம் செய்து விடுகிறோம். ஆனால் கதவு கைப்பிடி, தாழ்ப்பாள், உணவுப் பொருட்கள் வாங்க எடுத்துச் செல்லும் கூடை, பைகள் மற்றும் உணவுப் பொருட்கள் வைத்திருக்கும் ஃப்ரிட்ஜ் போன்றவற்றை நாம் அடிக்கடி சுத்தம் செய்வதில்லை. இதனால் அவற்றின் மறைவுப் பகுதியில் தேங்கும் அழுக்குகளில் ஏராளமான நோய் கிருமிகள் உள்ளன. இதேபோல சமையலறையில் பயன்படுத்தும் துணி,

பல வீடுகளில் கரிப்பிடித்து அழுக்காக இருக்கும். வீட்டின் தரைப்பகுதிகூட வாரத்துக்கு ஒருமுறை அல்லது மாதத்துக்கு ஒரு முறைதான் சுத்தம் செய்யப்படுகிறது. இதன் மூலமும் மனிதர்களுக்கு நோய் கிருமிகள் பரவுகின்றன. வீட்டு உபயோகப் பொருட்களை எத்தனை முறை சுத்தம் செய்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எப்படி சுத்தம் செய்கிறோம் என்பதும் முக்கியம்”

இந்நிலையில்தான் வீட்டில் எல்லா நேரங்களிலும் எல்லாருடைய கரங்களிலும் சுழன்று வந்து கொண்டிருப்பது டிவி ரிமோட். ஆனால், அதனுடைய அசுத்தம்தான் மிக அதிமாம்.இந்த ஆய்வில் பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

முன்னரே குறிப்பிட்டது போல் குப்பைத் தொட்டி, படுக்கையறைத் தரைவிரிப்பு, டிவி ரிமோட், கழிப்பறை அமர்விடம் என்று பலவற்றிலும் கிருமி, யீஸ்ட் மற்றும் பூஞ்சைகள் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கப்பட்டது. ஆகக் கூடி இருப்பதிலேயே மிகவும் அசுத்தமாக இருந்தது டிவி ரிமோட்தான். ரிமோட்டில் இருந்த கிருமிகள், யீஸ்ட் ஆகியவற்றின் அளவு ஒரு குறிப்பிட்ட பரப்பில் 290 அலகுகளாக இருந்தது. ஒப்பிட்டுப் பார்த்தால், கழிப்பறை அமர்விடத்தில் 12.4 அலகுகள் மட்டுமே.  ஆய்வு நடத்தியவர்களுக்கே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய அதிர்ச்சித் தகவல் இது.

கழிப்பறையைவிட எட்டு மடங்கு அசுத்தமாக இருக்கிறது உங்களுடைய ஸ்மார்ட் கடிகாரம் என்றோர் ஆய்வு முடிவு வெளியான நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அடுத்த அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அதனால் ரிமோட்டைத் தொடாமலிருப்பது நல்லது, தொட்டால் கைகழுவிக் கொள்வது மிகவும் நல்லது அல்லது குறைந்தபட்சம் இயன்றவரை ரிமோட்டைச் சுத்தமாகப் பராமரிக்கப் பார்ப்பது நல்லது.

error: Content is protected !!