ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்; இந்திய வீராங்கனை தீபா இறுதிப்போட்டிக்கு தகுதி!

ஒலிம்பிக்  ஜிம்னாஸ்டிக்;  இந்திய வீராங்கனை தீபா இறுதிப்போட்டிக்கு தகுதி!

ரியோ ஒலிம்பிக் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கிய நிலையில் ஆண்கள் ஹாக்கி மற்றும் துடுப்பு படகு போட்டி, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு ஆகியவற்றில் இந்திய வீரர்கள் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகளை புரிந்தனர். இந்நிலையில், 2-வது நாள் ஆட்டத்தில் ஜிம்னாஸ்டிக் போட்டியின் அன்ஈவன் பார் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மார்கர் இறுதிச் சுற்றுக்கு நுழைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

gym aug 8

ஜிம்னாஸ்டிக் போட்டியின் பங்கேற்ற இந்தியாவின் தீபா கர்மாகர் நான்கு வகையான ஜிம்னாஸ்டிக் பிரிவுகளில் ஒட்டுமொத்தமாக 51.665 புள்ளிகளை பெற்று 27-வது இடத்தை பிடித்துள்ளார்.வால்ட் பிரிவில் தீபா கர்மார்க்கர் 14.850 புள்ளிகள் எடுத்து 8-வது இடத்தில் உள்ளார். அன் ஈவன் பார் பிரிவில் 11.666 புள்ளிகளும், பேலண்ஸ் பீம் பிரிவில் 12.866 புள்ளிகளும், ஃப்ளோர் பிரிவில் 12.033 புள்ளிகளையும் பெற்றுள்ளார். இந்த பிரிவிற்குள் 52 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் நுழையும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் வால்ட் போட்டியில் பங்கெற்ற முதல் நபர் என்ற பெருமையை திபா கர்மாகர் பெற்றார். தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே அவர் இத்தகைய சாதனையை நிகழ்த்தினார்.

தீபா ‘ஜிம்னாஸ்டிக் ஸ்டார்’ ஆனது எப்படி?

ஆரமபத்தில் தீபாவுக்கு ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை. ஆங்கிலத்துக்கு பதில் ஜிம்னாஸ்டிக் படிக்கிறேனே..ப்ளீஸ் என்று தந்தையிடம் வாக்கு கொடுத்ததற்காக பயிற்சிக்கு சென்றுவந்தார். ஆனால் 2007-ம் ஆண்டில் நடந்த தேசிய ஜூனியர் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்கம் வென்றதும் ஜிம்னாஸ்டிக் மீதான அவரது பார்வை மாறிப்போனது. ஜிம்னாஸ்டிக் தான் தனது வாழ்க்கை என்று முடிவு செய்த அவர் அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார்.

அதன் பிறகு ஜிம்னாஸ்டிக்கில் அவர் குவித்துள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 77. இதில் 67 தங்கப்பதக்கங்களும் அடங்கும். உள்ளூர் போட்டிகளில் மட்டுமே தன்னால் வெற்றிபெற முடியும் என்று நினைத்திருந்த தீபா கர்மாகரின் பார்வையை விசாலப் படுத்தியவர் ஆசிஷ் குமார்.

2010-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் ஆசிஷ் குமார் ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வென்ற போது இந்திய ஜிம்னாஸ்டிக் அணியில் தீபா கர்மாகரும் இருந்தார். அவரைப் போல் தானும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையில் அயராமல் உழைத்தவர், 2014 காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் வால்ட் பிரிவில் வெண் கலப் பதக்கம் வென்று ஜிம்னாஸ் டிக்கில் இந்தியாவின் கொடியை மேலும் உயரமாக பறக்கவிட்டார்.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கிடைத்த பதக்கம் அவரது நம்பிக்கையை மேலும் அதிகரிக்க, ஒலிம்பிக்கை நோக்கி வேக நடைபோடத் தொடங்கினார். தற்போது ஒலிம்பிக் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

Related Posts

error: Content is protected !!