ராக் ஸ்டார் ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வை அறிவித்தார்!

ராக் ஸ்டார் ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வை அறிவித்தார்!

டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.இந்திய ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த நேரத்தில், நேற்றே கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தங்களின் டி20 போட்டிகளுக்கான ஓய்வை அறிவித்தனர். இதனை தொடர்ந்து இப்போது டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவீந்திர ஜடேஜா சற்றுமுன் அறிவித்துள்ளார்.

‘ஜட்டு’, ‘ராக்ஸ்டார்’, ‘சர் ஜடேஜா’ என எத்தனையோ செல்லப் பெயர்கள் ரவீந்திர ஜடேஜாவிற்கு உண்டு. இவற்றில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே பாராட்டி வைத்த பெயர்தான் ‘ராக்ஸ்டார்’. இந்த புகழும், பெருமையும் அத்தனை எளிதாக அவருக்குக் கிடைத்துவிடவில்லை.அவர் கடந்து வந்த பாதை சாதாரணப் பாதை அல்ல… ஒரு சராசரி மனிதனாக இழப்புகள், அவமானங்கள்,பிரச்சினைகள் என அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். போராடிப் போராடித்தான் தன்னை கிரிக்கெட்டில் நிலைநிறுத்திக்கொண்டவரிவர்

2009ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான அவர், 74 போட்டிகள் விளையாடி 515 ரன்கள் எடுத்துள்ளார்.அவரின் அதிகபட்ச ஸ்கோர் 45* ஆகும். மேலும், அவர் 54 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் ஒருநாள், டெஸ்ட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில் ஜடேஜா குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஓய்வுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘“நன்றி நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். உறுதியான குதிரை பெருமையுடன் துள்ளிக் குதிப்பதைப் போல, நான் எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன், மற்ற வடிவங்களில் அதைத் தொடர்ந்து செய்வேன். டி20 உலகக் கோப்பையை வெல்வது ஒரு கனவு நனவானது, இது எனது டி20 சர்வதேச வாழ்க்கையின் உச்சம். நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

ரவீந்திர ஜடேஜா, இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர். பிறந்தது டிசம்பர் மாதம் 6-ம் தேதி குஜராத் நவகம் கேட் எனும் இடத்தில் 1988-இல். அப்போது ஜடேஜாவின் குடும்பம் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஜடேஜாவின் அம்மா லதா, அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்தார். அந்த காலத்தில் அவர் சம்பாத்தியத்தில் வீடு இயங்குவதை பலரும் வியப்பாக பார்த்தனர். ரவீந்திர ஜடேஜாவின் அப்பா அனிருத் ஜடேஜா, சரியான வேலை இல்லாமல் சின்ன சின்ன வேலைகளை செய்து குறைந்த வருமானத்தை மட்டுமே ஈட்டினார்.

பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஜடேஜா, 10 வயதிருந்த போதே விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டிருந்தார். கிரிக்கெட் விளையாட தொடங்கிய அவரை, சீனியர் மாணவர்கள் கிண்டல் கேலி செய்வதும் வழக்கமாக இருந்தது. அதனால் தினமும் இரவு நேரங்களில் அழுவாராம் ஜடேஜா. மஹேந்திரசின்ஹ் செளஹான், இளம் கிரிக்கெட் வீரர்களை கோச் செய்யும் ஒரு விளையாட்டு வீரர். கிரிக்கெட் பங்களா என்ற இடத்தில் அவர் பயிற்சி அளிப்பார். ஸ்பின் பந்துவீச்சாளார்களுக்கு சிறப்பாக பயிற்சி தரும் அவர், பந்து வீசும்போது பிட்ச்சின் இடையில் ஒருவரை நிற்கவைத்து விட்டு, அவரின் தலைக்கு மேல் பந்தை வீச சொல்லி புதுவகை நுட்பத்தை கையாண்டு பயிற்சியளிப்பார். இவர்தான் ரவீந்திர ஜடேஜாவின் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியவர் என்றே சொல்லலாம்.

பயிற்சியில் கடுமையான கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் கையாளுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சமயம், ஜடேஜாவின் முன் இரண்டில் ஒரு வாய்ப்பை தேர்வு செய்யும் இக்கட்டான சூழல் ஏற்பட்டது. கிரிக்கெட் பங்களாவில் கிரிக்கெட் பயிற்சியை தொடருவது அல்லது ஆர்மி பள்ளிக்கு சென்று கல்வியை தொடர்வது என்று வந்தபோது, அவர் கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்தார். வேகப்பந்து வீச்சாளராக கிரிக்கெட்டில் தன் பயணாத்தை தொடங்கிய ஜடேஜா, பயிற்சியாளர் செளஹானின் அறிவுரையின் பேரில் பின்னர் இடதுகை ஸ்பின்னராக மாறினார். இரவு தூக்கத்தின் போது நடக்கும் பிரச்சனையை கொண்டிருந்த ஜடேஜாவை பலமுறை செளஹான் திட்டி அடித்துள்ளார். ஒரு மேட்சின் போது, பல ரன்களை ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டக்காரர் எடுத்தபோது, இடையில் கோச் செளஹான் அவரை மோசமாக விளையாடுவதற்காக பார்வையாளர்களுக்கு முன்பே கன்னத்தில் அறைந்தார். அடிவாங்கிய பின்னர் பந்துவீசிய ஜடேஜா, ஐந்து விக்கெட்டுகளை மேட்சின் இறுதிக்குள் எடுத்தார்.

19 வயதுக்கு உட்பட்ட இந்திய ஜூனியர் அணியில், தனது 16 வயதில் விளையாடினார். 2008-ம் ஆண்டு 19 வயதுக்குப்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் கோலி கேப்டனாக இருந்த இந்திய அணிக்குத் துணை கேப்டனாக ஜடேஜா இருந்தார் என்பதும் தோனொயின் வலது கரமாக திகழ்ந்தார் என்பதும் வரலாறு.ஒரு முறை வர்ணணையாளர் , ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக 1000 ரன்களுக்கு மேல் எடுத்ததோடு, 100க்கும் அதிகமாக விக்கெட் கைப்பற்றியதோடு, 100 கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்டஹ்வர் ஜடேஜா என்று குறிப்பிட்டார். ஆனால், உண்மையில் எனக்கு அதைப் பற்றி தெரியாது என்று ஜடேஜா தெரிவித்தார்,

எனி வே குட் லக் ஜடேஜா .

error: Content is protected !!