சென்னைப் போலீசைப் புரட்டிப் போடுங்க ஸ்டாலின் சார்!

சென்னைப் போலீசைப் புரட்டிப் போடுங்க ஸ்டாலின் சார்!

து எதெற்காகவோ போலீஸ் டிப்பார்ட்மெண்டை பந்தாடும் ஸ்டாலின் அரசு சென்னை போலீஸை சீரமைத்தே ஆக வேண்டிய கட்டாய சூழல் உருவாகியுள்ளது.

ஆம்.. நமது தமிழ்நாட்டின் தலைநகரமெங்கும் குற்றங்களை தடுக்கவும், கண்டுபிடிக்கவும் சிசிடிவி கேமராவின் அவசியத்தை பறைசாற்ற, நடிகர் விவேக் நடித்த மூன்றாம் கண் என்ற குறும்படத்தை நம்மில் எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறோம்?

முன்னொரு காலத்தில் ஈ மெயில் அல்லது சிசிடிவி என்ற சொல்லடலையே சென்னை போலீஸ் அறியாத காலக் கட்டத்தில் அப்போதைய டிஜிபி ஸ்ரீபால் மற்றும் துரை ஆகியோரிடம் ஆலோசனை பெற்று, தமிழ்நாடு போலீஸூக்கென் இணையதளம், நகரெங்கும் கண்காணிப்பு கேமரா வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தவன் அடியேன், அதற்க்காக டிஜிபி ஆர்டரின் பேரில் அண்ணாநகர் டிசியாக இருந்த சிவனாண்டியிடம் ஏகப்பட்ட முறை டிஸ்கஸ் செய்தேன்..!

ஆனால் அப்போது எனக்குக் கை கூடாத மூன்றாவது கண்தான்- 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் அப்போதைய போலீஸ் கமிஷனர் டாக்டர். ஏ.கே. விஸ்வநாதனால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். இதன் பின்னர் நகரத்தில் பரவலாக சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டன. பொது-தனியார் கூட்டமைப்பு மூலம் கடைக்காரர்கள், வணிகர்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்களை இணைத்து, நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.

ஒவ்வொரு 50 மீட்டர் இடைவெளியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவால் காவல் துறை கண்காணிப்பு அடுத்த கட்டத்திற்கு முன்னேறியது. குற்றங்களை கட்டுப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, சாலை விதிமீறல்கள் என முக்கிய நடவடிக்கைகளை கையாளுவதில், சென்னையின் மூலை முடுக்குகளில் நிறுவப்பட்ட 2.5 லட்சத்திற்கும் மேலான கண்காணிப்பு கேமராக்கள் உதவின.

அப்படி கேமராக்கள் பொருத்தப்பட்டாலும், பராமரிப்பு சவாலாக அமைந்தது. மழைப் பொழிவில் மரக்கிளை முறிந்து விழுந்ததில், வெங்கட் ராமன் தெருவில் பொறுத்தப்பட்டிருந்த பல கேமரா கீழே விழுந்தது. ஏகப்படவை பழுதடைந்து விட்டது. .இதை சரி செய்ய போதுமான பராமரிப்பு ஆட்கள் இல்லை .. அடுத்தடுத்து போலீசிடம் புகார் செய்தால் கேமராவை கழட்டி எடுத்துச் சென்று விடும் போக்கு நிலவியது.

2020-ம் ஆண்டு மத்தியில் போலீஸ் கமிஷனர் மாறிய நேரத்தில், மூன்றாவது கண் திட்டம் அறிவிப்பின்றி நிறுத்தப்பட்டதாக அறிவித்தார்கள். கண்காணிப்பு கேமரா நிறுவல் மற்றும் கண்காணிப்பு பணி அவர்கள் வசம் இல்லையென்றும் அந்தந்த குடியிருப்புகள் அல்லது வணிக வளாகங்கள் தாங்களாகவே இதை செய்ய வேண்டும் என காரணம் தெரிவிக்கப்பட்டது. .

மேலும் இத்தகைய கேமராக்களால் பாதிப்படைவோர் உரிய நபரைப் பிடித்து கவனித்து கேமராவை பழுதடைய செய்யும் போக்கையுக் செய்யத் தொடங்கினர்.. வளர்ந்து வரும் நாகரிகப் போக்கை நன்குப் புரிந்த ஜெயலலிதா அட்மிட் ஆன அப்போலோ கண்காணிப்புக் கேமராவுக்கே என்ன நிலை ஆனது என்று யோசித்தால் நடப்பதை புரிந்து கொள்ளலாம். அத்துடன் இப்போதுள்ள கேமராக்களை ட்ராபிக் போலீஸ் மட்டுமே பார்த்து பைன் போட மட்டும் பயன் படுத்துவதும் வேதனை!

மேலும் இது போன்ற கண்காணிப்போ ஏன் செல்போனோ கூட இல்லாத காலக்கட்டத்தில் கூட சென்னை இண்டெலிஜென்ஸ் செக்சன் எனப்படும் ஐ எஸ் விங் அன்றாடம் நகரைக் கண்காணித்து மேலிடத்துக்கு தகவல் கொடுப்பதில் ஸ்கோர் செய்து கொண்டிருந்தார்கள்.. ஒவ்வொரு ஏரியாவுக்கும் உள்ள ஐ எஸ் கான்ஸ்டபிள் அந்த ஏரியா கான்ஸ்டபிளைக் கூட கண்காணித்து மேலிடத்துக்கு தகவல் சொல்லும் போக்கு இருந்தது. இதில் சில கான்ஸ்டபிள்கள் 24 மணி நேர குடிகாரர்கள் என்பதும் அப்படி சதா குடித்தப்படி சூழலைக் கவனித்தும் கணித்தும் மேலிடத்துக்கு மட்டும் ரிப்போர்ட் செய்வோரையும் நான் நன்கறிவேன். இப்போது இந்த செக்‌ஷனே வெட்டி என்ற அளவில் பேரெடுத்து விட்டது. போதாதற்கு சென்னையில் நைட் ரவுண்ட்ஸ் வரும் போலீஸ் கேஷூவலாக சைக்கிளில் வருவது வாடிக்கை.. அதன் மூலம் போலீசாரின் உடல் நலத்துக்கு உரியதாக இருந்ததுடன், சந்து பொந்தெல்லாம் நுழைந்து டார்ச் லைட் அடித்து பார்த்து வந்ததால் குற்றங்கள் மிக குறைவு. ஆனால் இப்போது அவ்வழக்கத்தை ஒழித்து ஹை டெக்கான கார்களை சைரன், நான் ஸ்டாப் ரெட் லைட்டுடன் உலா வருவதால் எந்த பலனுமில்லை என்பதை ஏனோ உணரவே இல்லை.

உண்மை நிலவரம் என்னவெனில் இந்தியா அளவில் அதிக குற்றம் பதிவாகும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த முதலிடப் பெருமை இப்போதில்லை கடந்த நான்காண்டுகளாக நீடிக்கிறது. பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை நான்கு ஆண்டுகளாக கடைசி இடத்தில் உள்ளது.இந்தியாவில் 2023-ம் ஆண்டு மட்டும் வயதானவர்களுக்கு எதிராக 35 ஆயிரம் குற்றங்கள் நடந்துள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 4,581 குற்றங்கள் நடந்திருக்கின்றன; இதில் சென்னையில் மட்டும் 521 குற்றங்களாக்கும். ஆனால் இது குறித்து நம்மிடம் பேசிய சீனியர் போலீஸ் ஆபீசர், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த ஒரு சின்ன குற்றை விஷயமாக இருந்தாலும் முதலில் அது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விடும் வழக்கம் உள்ளது. இந்த வழக்கம் எல்லா மாநிலங்களிலும் கிடையாது. வாய் மொழி பஞ்சாயத்து அல்லது கேஸ் ரிஜிஸ்டரில் மட்டுமே பதிவு செய்வது வாடிக்கைள். இப்படி இருக்க, இந்த வழக்குகளின் எண்ணிக்கையைவைத்து மட்டுமே சென்னையைப் பாதுகாப்பு இல்லாத நகரம் என்று கூறுவது சரியாக இருக்காது“ என்றார்.

இருக்கலாம்.. இனியாவது கடந்த மூன்று மாத சென்னை போலீசின் ரிக்கார்ட்டுகளை வைத்து எடுத்துக் கொண்டு அதை அணுஅணுவாக ஆராய்ந்து அவசிய நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் வந்து விட்டது . தமிழ்நாட்டின் தலைநகரான சிங்கார சென்னையில் சுட்டெரிக்கும் சூரியனை மட்டுமே சாட்சியாக வைத்துக் கொண்டு ஏதோ ஒரு பகுஜன் அரசியல் தலைவரை கண்மூடித்தனமாகத் தாக்கி கொலை செய்து விட்டு போனவர்கள் யாரென்று தேடி வரும் போலீஸை தண்டிக்க வேண்டும். குற்றம் நடந்த பின்னர் வரும் போலீஸ் சினிமாவில் மட்டுமே இருக்க வேண்டும்.. நிஜ போலீஸின் வேலை குற்றம் நடப்பதை கண்டுணர்ந்து தடுக்கும் ஆற்றலை மேம்படுத்துவதே என்பதை சகலரும் உணர வேண்டும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு சல்யூட் அடிக்கவில்லை என்பதற்காகவெல்லாம் ட்ரான்ஸ்பர் செய்யும் ஸ்டாலின் அரசு ,கொஞ்சம் மனது வைத்து சென்னைப் போலீசைப் புரட்டி தமிழக அரசின் மானத்தை மட்டுமின்றி உயிரையும் காக்க ஆவன செய்ய வேண்டுமென ஆந்தை ரிப்போர்ட்டர் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்

error: Content is protected !!