அமெரிக்க அதிபர் தேர்தல் :டிரம்பை எதிர்க்க ஜோபிடன் தேர்வு!

அமெரிக்க அதிபர் தேர்தல் :டிரம்பை எதிர்க்க ஜோபிடன் தேர்வு!

அமெரிக்க தேர்தலுக்கான அதிபர் வேட்பாளராக ஜோபிடனை, ஜனநாயக கட்சி அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.கடந்த ஜூன் மாதத்திலேயே 3900 பிரதிநிதிகளுக்கு மேற்பட்டோரின் பெரும்பான்மையினரின் ஆதரவை பிடன் பெற்றிருக்கிறார் என்ற நிலையில், இந்த வேட்பாளர் நியமனம் அதிகார அறிவிப்பு வெறும் சம்பிரதாயம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

.

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், 2-வது முறையாக போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அமெரிக்க தேர்தலுக்கான அதிபர் வேட்பாளராக போட்டியிட ஜோ பிடனை, ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘துணிச்சலான மனிதர்’ என்று ஜோபிடனை மனம் திறந்து பாராட்டியிருக்கும் ஜனநாயக கட்சியும், அதன் ஆதரவு மக்களும், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பின் நான்காண்டுக்கால ஆட்சி குழப்பங்களை தீர்த்து வைக்கும் நாயகன் என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளது.

உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக மக்களை நேருக்கு நேராக சந்திக்காமல் ஆன்லைன் மூலம் சந்தித்ததில் 50 மாநில மக்கள் – 7 யூனியன் பிரதேச மக்கள் பிடன் தேர்வை சரியே என்று அங்கீகரித்திருக்கிறார்கள்.

ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை ஏற்ற பிடன் ‘‘அனைவருக்கும் என் இதயத்தின் அடித் தளத்தில் இருந்து நெஞ்சார்ந்த நன்றி… நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று நெகிழ்ச்சியோடு வீடியோ மூலம் நன்றி தெரிவித்தார் பிடன்.‘‘உலகமே எனக்கு நீங்கள் தான். நீங்கள் தான் என் குடும்பம்’’ என்று குறிப்பிட்ட பிடன், நாளை (வியாழக்கிழமை) சம்பிரதாய ஏற்புரை நிகழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து ஜோ பிடன் ட்விட்டரில் , “அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வது எனது வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை” என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!