இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் எம்.பி காலமானார்.

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் எம்.பி காலமானார்.

லங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாக இரா.சம்பந்தன் எம்.பி. பதவி வகித்து வந்தார். இந்நிலையில், இவர் வயது மூப்பு காரணமாக சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.இந்நிலையில், இன்று இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன்(91) காலமானார்.

இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராகவும் திகழ்ந்து வந்தார். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் திரிகோணமலையின் எம்.பியான இவர், கடந்த 25 ஆண்டுகளாக இலங்கை தமிழர்கள் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தார். தமிழர்களின் தனிநாடு கோரிக்கை நிறைவேற வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து, ராஜ்பக்சே, மைத்ரிபால சிறிசேனா மற்றும் ரணில் விக்கிரமசிங்கே போன்ற அதிபர்களுடன் சேர்ந்து அரசியல் பயணங்களை மேற்கொண்டு வந்தார். சர்வதேச அளவில் நடைபெறும் இலங்கை தமிழர்கள் தொடர்பான கூட்டங்களில், முக்கிய பிரதிநிதியாகவும் இரா. சம்பந்தன் பங்கேற்றுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!