ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்த பாக் வீரர் சிர்பாஸ்கான்!

ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்த பாக் வீரர் சிர்பாஸ்கான்!

உலகின் மிக உயரமான மலை எவரெஸ்ட் உச்சியை சிர் பாஸ் கான் அடைந்தார், ஆக்சிஜனை நம்பாமல் இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது பாகிஸ்தானியர் என்ற பெருமையைப் பெற்றார்.

“இமேஜின் நேபாள் 2024 எவரெஸ்ட் பயணக் குழு” வின் ஒரு பகுதியாக சிர்பாஸ் கான் பங்கேற்றார், இந்த குழுவில் 14 சர்வதேச மலையேறுபவர்கள் மற்றும் 18 அனுபவம் வாய்ந்த ஷெர்பாக்கள் (நேபாள், திபேத் மலைப்பகுதியில் வசிப்பவர்கள்) அடங்குவர். இந்த பயணக் குழு மே 21ம் தேதி காலை 5:15 மணி முதல் 10 மணிக்குள்ளாக எவரெஸ்ட் உச்சத்தை அடைந்தது. சிர்பாஸ் கானின் குறிப்பிடத்தக்க சாதனை . இந்த சாதனையானது அவரது அசாத்தியமான உடல் மற்றும் மன வலிமை, அத்துடன் மலையேற்றத்தில் அவரது நிபுணத்துவத்தையும் வெளிக்காட்டுகிறது. இந்த பயணக் குழுவில் சீனா, போலந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த மலையேறுபவர்களும், நேபாளத்திலிருந்து வந்த அனுபவம் வாய்ந்த ஷெர்பாக்களும் இருந்தனர். அவர்கள் வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் முக்கிய பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், கூடுதல் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட் ஏற முயற்சித்த ருமேனிய மலையேறுபவர் கிரூய், பயணத்தின் மூன்றாம் முகாமில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் எவரெஸ்ட்டில் 8,000 மீட்டருக்கு மேலே சென்ற நிலையில் மற்ற இரண்டு பேரும் காணாமல் போனதாக பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உயரமான மலைகளில் ஏறுவதற்கு பொதுவாக கையடக்க ஆக்ஸிஜன் கருவி தேவைப்படுகிறது, மேலும் எவரெஸ்ட்டைக் ஏறுவதற்கு இது அவசியம் என்று கருதப்படுகிறது, இருப்பினும் சில மலையேறுபவர்கள் மற்றும் குறிப்பாக ஆல்பைன் பாணி மலையேறுபவர்கள் 1978 ஆம் ஆண்டில் ரெய்ன்கோல்ட் மெஸ்னர் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த போக்கு, ஆக்சிஜன் இல்லாமல் எவரெஸ்ட்டை ஏறி சாதனை படைத்துள்ளனர். அதற்கு முன்பு, கூடுதல் ஆக்ஸிஜன் துணை இல்லாமல் எவரெஸ்ட்டின் உச்சத்தை அடைவது அறிவியல் ரீதியாக சாத்தியமற்றது என்றே கருதப்பட்டது. எவரெஸ்ட்டின் உச்சத்தை அடைபவர்களில் 95 சதவீதம் பேர், ஆக்சிஜன் சிலிண்டர் கருவியை பயன்படுத்தியே மேலே ஏற முடியும் என்றே கூறப்படுகிறது. மலை ஏறும் சாகசக்காரர்கள் அல்லது மலையேறுபவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட்டைக் ஏறவே விரும்புகிறார்கள். ஆனாலும் அண்மை காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட்டைக் ஏறுவது சாத்தியமானது என்றாலும் ஆபத்தானது என்று உறுதிப்படுத்துகிறார்கள்.

எவரெஸ்ட்டின் உச்சம் கடல் மட்டத்திலிருந்து 5 மைல் உயரத்தில் உள்ளது. குறைந்த காற்று அழுத்தம் காரணமாக உண்மையில் மூன்றில் ஒரு பங்கு வளிமண்டலமே அங்கு உள்ளது. 1960 களில் உயரமான மலைகளில் ஏறுவதால் உடலில் ஏற்படும் மாறுபாடுகளை மருத்துவர்கள் ஆய்வு செய்தார்கள். மேலும் எவரெஸ்ட்டின் உச்சியில் உள்ள வளிமண்டலம் மிகவும் மெல்லியதாக இருப்பதால், அது ஓய்வெடுக்கும் மனிதர்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று கண்டறிந்தனர். இதுபோன்ற சாதனை முயற்சியை மேற்கொள்வது கூட தீவிரமான, திரும்பப் பெற முடியாத மூளை பாதிப்பு (சிறந்த பட்சத்தில்) அல்லது மரணத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மலை ஏறுவதற்கான ஆக்சிஜன் சிலிண்டர் கருவி மிகவும் விலை உயர்ந்தது என்று கூறுகின்றனர். ஏனென்றால், மலையேற்ற பயணத்திற்கு சுமார் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் செலவாகிறது என்று கூறப்படுகிறது. இதில், துணைக்கு வரும் ஷெர்பாக்கள், விமான கட்டணம், தங்குவது, உணவு என பெரும் செலவு ஏற்படும் நிலையில், மலை ஏறுவதற்கான ஆக்சிஜனை, தரை வழியில் மட்டுமே கொண்டு வர முடியும் என்கிறார்கள். விமானத்தில் அதனை கொண்டு வர அனுமதி இல்லை என்பதால், தரை வழியாக அல்லது கடல் வழியாக மட்டுமே ரஷ்யாவில் இருந்து கொண்டு வர முடியும். அதனை சுமந்து வர மலையேற்ற பயிற்சியாளர்களும் வேண்டும் என்பதால் அது கூடுதல் செலவாக கருதப்படுகிறது. ஆக்ஸிஜன் எடுத்துச்சென்றாலும் இல்லாவிட்டாலும், எவரெஸ்ட் சிகரம் ஏறுதல் பல்வேறு சவால்களை கொண்டுள்ளது என்பதே உண்மை

error: Content is protected !!