தெற்கு ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகம் பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை!

தெற்கு ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகம் பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை!

மூக ஊடக தளங்களை அதிகமாகப் பயன்படுத்தும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்புள்ள, கவலை, மனச்சோர்வு மற்றும் மனநோய்களை புதிய சட்டம் தடுக்கும் என்றும் ஆதரவாளர்கள் நம்புகின்றனர். இதை அடுத்து தெற்கு ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகம் பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளங்கையில் அடங்கிவிட்ட செல் போனில் மூழ்கிவிட்ட நவீன உலகில் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு, அது முக்கிய பங்கு வகிக்கிறது.குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறது. எனவே முதல்முறையாக தெற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடங்கள் பயன்படுத்த தடை விதித்து முதல் மந்திரி பீட்டர் மலினஸ்காஸ் அறிவித்துள்ளார்.

வளரும் தலைமுறையை ஸ்மார்போன்கள் தவறான திசைக்கு கொண்டு செல்கின்றன என்று பெற்றோர்கள் அச்சம் தெரிவிப்பதுண்டு. என்னதான் `நல்ல பிள்ளை ஸ்மார்ட்போனால கெட்டுப்போகாது’ என வசனம் பேசிக் கொண்டாலும், பெரும்பாலானவர்கள் இதற்கு இரையாவதுண்டு. அதனால் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த பெற்றோரின் ஒப்புதல் அவசியம் என்று ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது. இதற்கான நடைமுறையை ஆராய உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான ஒரு குழுவையும் அரசாங்கம் நியமித்துள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

error: Content is protected !!