சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இலங்கைத் தமிழர் தர்மன் சண்முக ரத்தினம் வெற்றி!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இலங்கைத் தமிழர் தர்மன் சண்முக ரத்தினம் வெற்றி!

சிங்கப்பூர் அரசின் முன்னாள் துணைப் பிரதமராக இருந்த தர்மன் சண்முகரத்தினம் அதிபர் தேர்தலில் வென்றதன் மூலம் அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார். அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று சிங்கப்பூரின் 9வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தன்னுடன் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களையும் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். சிங்கப்பூரின் வளர்ச்சி சரித்திரத்தில் பல தமிழர்களின் பங்கு மறுக்க முடியாதவையாகும். இம்முறை அதிபர் தேர்தலில் ஓர் தமிழர் வெற்றி வாய்ப்பை பெறும் அளவுக்கு உயர்ந்திருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது

நம் நாட்டு அரசியலமைப்பு நடைமுறைப்படியே சிங்கப்பூர் அரசியலமைப்பும் நடைமுறையில் இருக்கிறது. சிங்கப்பூரில் அதிபர் முறை இருந்தாலும் அதிகாரங்களைப் பொறுத்தவரை பிரதமருக்கே அதிகமாக இருக்கும். செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் தற்போதைய அதிபரின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் தொடங்கின.

இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66) மற்றும் இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்கள் 3 பேரும் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டது.

தேர்தல் பிரச்சாரம் வரும் நேற்றுமுன்தினம் (ஆகஸ்ட் 30-ம் தேதி) நிறைவு பெற்ற நிலையில் இன்று (செப்டம்பர் 1-ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் முதல்முறையாக வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் 10 நகரங்களில் சிங்கப்பூர் மக்கள் வாக்களித்தனர். சுமார் 27 லட்சம் மக்கள் வரை வாக்களித்த நிலையில் உடனடியாக  வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ங்கப்பூரின் 9 ஆவது அதிபராக தர்மன் சண்முகரத்தினம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தமாக 70.4% வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முகரத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அந்நாட்டு தேர்தல் துறை அறிவித்துள்ளது.

இலங்கைத்தமிழரான தர்மன் சண்முகரத்தினம் லண்டனில் பொருளாதாரம் படித்தவர்.. இதற்கு முன்பு சிங்கப்பூரில் நிதியமைச்சர் உட்பட பல்வேறு துறை அமைச்சராக தர்மன் சண்முகரத்தினம் இருந்துள்ளார். மேலும் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் பதவி வகிக்கிறார்.

தேர்தல் வெற்றிக்கு பிறகு அவர் அளித்த பேட்டியில், “சிங்கப்பூர் மக்கள் தனக்கு அளித்துள்ள ஆதரவுக்கு உண்மையிலேயே மதிப்பளித்து அதனை காப்பாற்றுவேன்.எனக்கு அளிக்கப்பட்ட வாக்கு சிங்கப்பூருக்கு அளிக்கப்பட்ட வாக்காகும்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு சிங்கப்பூரில் செல்லப்பன் ராமநாதன் மற்றும் தேவன் நாயர் ஆகியோர் தமிழர் வம்சாவளி அதிபர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க்து

error: Content is protected !!