ஒரே நாடான இந்தியாவில் மாநிலவாரியாக பெட்ரோல் விலை!

ஒரே நாடான இந்தியாவில் மாநிலவாரியாக பெட்ரோல் விலை!

இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பெட்ரோல் இறக்குமதி நாடாகும் என்று OPEC (எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு) தெரிவிக்கிறது .இந்தியாவில் ஒரு நாளைக்கு 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. பொருளாதார காரணங்களால் தற்போது இதன் கிராக்கி, கடந்த 6 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிற்கு சரிந்துள்ளது..

பெட்ரோல் – ஜிஎஸ்டி வரம்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதன் மீது விதிக்கப்படும் வரி, மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். இதனுடன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் அல்லது குறையும். எனவே அதன் விலை, ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. அத்துடன் மத்திய அரசு கலால் வரி என்ற பெயரிலும், மாநில அரசுகள் சில நேரங்களில் VAT உடன் வேறு சில வரிகளையும் சேர்த்து அவற்றிற்கு பசுமை வரி, நகர விகித வரி போன்ற பெயர்கள் சூட்டப்படுகின்றன.மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் முக்கிய வருமான ஆதாரங்களாகும்.

 இந்நிலையில்

ஆந்திரா – ₹109.61
தெலுங்கானா – ₹109.41
மத்திய பிரதேசம் – ₹107.83
பீகார் – ₹107.17
கேரளா – ₹106.03
மேற்கு வங்கம் – ₹105.17
மகாராஷ்டிரா – ₹104.56
ராஜஸ்தான் – ₹104.52
கர்நாடகா – ₹103.44
ஒடிசா – ₹102.34
தமிழ்நாடு – ₹102
சத்தீஸ்கர் – ₹101.52
சிக்கிம் – ₹100.85
மணிப்பூர் – ₹99.15
ஜார்கண்ட் – ₹98.39
அசாம் – ₹97.44
பஞ்சாப் – ₹96.80
திரிபுரா – ₹96.64
நாகாலாந்து – ₹96.17
ஹரியானா – ₹95.46
கோவா – ₹95.36
மேகலா – ₹94.92
டெல்லி – ₹94.72
உத்தரபிரதேசம் – ₹94.70
குஜராத் – ₹94.44
மிசோரம் – ₹93.79
உத்தரகாண்ட் – ₹93.82
இமாச்சல பிரதேசம் – ₹93.74
அருணாச்சல பிரதேசம் – ₹93.48

error: Content is protected !!