வீட்டில் சமைத்த உணவுகளை வழங்கும் ஸ்விக்கி டெய்லி ரிட்டர்ன்!

வீட்டில் சமைத்த உணவுகளை வழங்கும் ஸ்விக்கி டெய்லி ரிட்டர்ன்!

ஸ்விக்கி நிறுவன சேவைகளில் ஒன்றான ஸ்விக்கி டெய்லி சர்வீஸ் ஹோட்டல்களுக்கு மாற்றாக வீட்டில் சமைத்த உணவுகளை விரும்புவோருக்கு வரப்பிரசாதமாகும். ருசி மட்டுமன்றி வீட்டுச் சமையலின் கைப்பக்குவத்துக்காகவும் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்த ஸ்விக்கி டெய்லி வசதியை பயன்படுத்தி வந்தனர். இதன் மூலம் 3 நாள் முதல் மாதக்கணக்கு வரை நாள்தோறும் உணவுகளைப் பெறுவது சாத்தியகி இருந்த இந்த சேவை மீண்டும் துளிர் விடப் போகிறது. நகரங்களில் ’கிளவுட் கிச்சன்’ என்ற பெயரில் வீட்டில் சமைத்த உணவுகள் பிரபலமாகி வருவதன் மத்தியில், ஸ்விக்கியும் களத்தில் இறங்குவது வாடிக்கையாளர் மற்றும் உணவு சமைப்போர் என இருதரப்பினருக்கும் ஆதாயம் சேர்ப்பதாக அமையக் கூடுமாம்..

சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் உயர் கல்வி மற்றும் பணிநிமித்தம் தனியே தங்கியிருப்போர், தனிப்பட்ட தேவைகளுக்காக தற்காலிகமாக வீட்டுச்சாப்பாடு அவசியமாகும் குடும்பங்கள் ஆகியோர் இதனால் பயன்பெற்று வந்தனர். நகரங்கள் தோறும் இல்லத்தரசிகள் மற்றும் குறைந்த முதலீட்டில் சமையல் தொழிலில் வருமானம் ஈட்ட விரும்புவோர், வீட்டிலிருந்தபடியே வாடிக்கையாளர் விருப்பத்துக்கு ஏற்ப உணவுகளை சமைத்து டெலிவரி செய்து வருகின்றனர். தற்போது ஸ்விக்கி டெய்லி மூலம், இந்த வீட்டு உணவு தயாரிப்போருக்கான டெலிவரி சவால் நிவர்த்தியாகும். கொரோனா காலத்தில் இந்த விநியோக சங்கிலிக்கு தேவை அறுபட்டதால், ஸ்விக்கி தனது ஸ்விக்கி டெய்லியை நிறுத்தி வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி, 4 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத தனது ’ஸ்விக்கி டெய்லி’ சேவையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி, வீட்டில் வைத்து உணவை சமைப்போர் தொழிலும் புத்துயிர் பெற இருக்கிறது..
வீட்டுச் சாப்பாட்டை மிஸ் செய்பவர்களுக்கும், வீட்டுச் சாப்பாட்டின் ருசியை ட்ரை செய்ய நினைப்பவர்களுக்கும், இந்த ஸ்விகி டெய்லி ஆப் உதவும் என்று ஸ்விகி நிறுவனம் தெரிவித்து இருந்தது.

இந்த ஸ்விகி டெய்லி சேவையின் மூலம் பயனர்களுக்கு மிகக் குறைந்த விலையில் அருமையான வீட்டு உணவை வழங்க முடியுமென்று ஸ்விகி தெரிவித்துள்ளது. ஒரு வேலை சாப்பாட்டிற்கான துவக்க விலையே வெறும் ரூ.50 என்பது தான் கூடுதல் சிறப்பு. ஸ்விகி டெய்லி சேவையின் மூலம் தரமான உணவுகளை வெறும் ரூ.50 முதல் ரூ.100க்குள் பயனர்கள் ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொள்ளலாம். அதேபோல் ஸ்விகி அறிமுகம் செய்து இருந்த இந்த புதிய ஸ்விகி டெய்லி சேவையின் மூலம் பல சிறு வியாபாரிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமென்றும் ஸ்விகி நிறுவனம் தெரிவித்து இருந்தது. உங்களுக்கு பிடித்தமான வீட்டுச் சாப்பாட்டு மெனுவை பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்துகொள்ளலாம்

.ஸ்விகி டெய்லி சேவையைப் பயன்படுத்தும் பயனர்கள் “ஒரு வேலை” உணவிற்காக அல்லது “மூன்று வேலை” உணவிற்காக என அவர்களின் தேவைக்கு ஏற்றாற்போல் ஆர்டர் செய்துகொள்ளலாம். அதுமட்டுமின்றி உங்களுக்குப் பிடித்த உணவு தயாரிப்பாளரிடம் மாதாந்திர சேவைக்கும் ஸ்விகி டெய்லி ஆப் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். தற்போது வாடிக்கையாளர் கோரிக்கையின் அடிப்படையில் ஸ்விக்கி டெய்லியை படிப்படியாக பல்வேறு நகரங்களில் கொண்டு வருகிறது. பாரம்பரிய சமையல், சைவம் அல்லது அசைவம் மட்டுமே சமைப்போர், தேவை மற்றும் வசதிக்கு ஏற்ற உணவுக் கட்டணம் என பலவகையிலும் அனுகூலமான இந்த வசதிகளை ஸ்விக்கி டெய்லி ஒருங்கிணைக்கத் தயார் என அறிவித்துள்ளது.கொரோனா அலையில் நிறுத்தப்பட்டிருந்த இச்சேவை இப்போது மறுபடியும் வர இருப்பதுதான் ஹைலைட்

error: Content is protected !!