டி 20: அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்!

டி 20: அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்!

ங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை.  கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதி அதாவது முதன்முறையாக அரையிறுதிக்கு நுழைந்து அசத்தியுள்ளது. 115 ரன்களை மட்டுமே எடுத்து, பல்வேறு மழை குறுக்கீடுகளுக்கு நடுவே இந்த அபார வெற்றியை பெற்றிருக்கிறது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் கோப்பையை வென்ற அளவுக்கு ஆனந்தக்கண்ணீரில் மிதக்கின்றனர். ரஷித்கான், நூர் அகமது, நவீன் என அனைவரும் கட்டுக்கோப்பாக வீசியது பாராட்டத்தக்கது.

ரஷித் கான் அவ்வப்போது ஆக்ரோஷமாக இருந்தாலும் சரியான முறையில் பவுலர்களை சுழற்றி வங்கதேசத்தை வீழ்த்திவிட்டார். யாருக்காக இந்த வெற்றி கொண்டாடப்பட வேண்டும் என்றால், நிச்சயமாக அது பயிற்சியாளர் ஜோனாதன் ட்ராட் க்காக கொண்டாட வேண்டும். எல்லோரையும் விட அவரே அதிகளவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். மற்றொருவர் ப்ராவோ கடைசி வரை தான் தோனியின் படையில் இருப்பவன் என்பதை நிருபிப்பது போல அமைதியின் வடிவமாகவே இருந்தார். இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா அணி நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கும்! இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிவரும் றஹ்மதுல்லா குர்பாஸை பயிற்சியாளர் ட்ராட் தூக்கி தோளில் சுமந்து பெருமைப்படுத்தினார். கடைசியில் வந்து 19 ரன்கள் அடித்தும், 4 விக்கெட்களை வீழ்த்தியும் கேப்டன் ரோலை மிகச்சிறப்பாக முடித்துள்ளார் ரஷித் கான்..

இனி அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் நிலையில் தென்னாப்பிரிக்கா அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

27ஆம் தேதி அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.

ராஜேஷ்

error: Content is protected !!