2021ம் ஆண்டுக்கான வேதியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2021ம் ஆண்டுக்கான வேதியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

புவி வெப்பத்தின் பின்னணி என்ன என்று உலகுக்கு விளக்கிய ஜப்பான், ஜெர்மனி, இத்தாலியை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய 6 துறைகளில் உலகளவில் பங்களிப்பு செய்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று முன்தினம் முதல் அறிவிக்கப்படுகின்றன. முதலில் மருத்துவ நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் 2 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது.

நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தப் பரிசின் ஒரு பாதியை ஜப்பான் விஞ்ஞானி சுயுகுரோ மனாபே (வயது 90), ஜெர்மனி விஞ்ஞானி கிளாஸ் ஹேசல்மேன் (89) ஆகியோரும், இன்னொரு பாதியை இத்தாலி விஞ்ஞானி கியார்ஜியோ பாரிசியும் (73) பகிர்ந்து கொள்வார்கள்.

புவியின் வெப்ப நிலையின் பின்னணியையும், மனிதகுலம் அதில் தாக்கம் ஏற்படுத்துவது பற்றியும் உலகுக்கு விளக்கி ஒரு அடிப்படையை ஏற்படுத்தியவர்கள்தான் மனாபேயும், ஹேசல்மேனும்.

மனாபே, 1960-களில் காற்றுமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடு எவ்வாறு அதிகரித்து, அது உலகளாவிய வெப்பத்தை அதிகரிக்கிறது என்றும் காட்டி உள்ளார். இதற்கான மாதிரியை உருவாக்கி ஹேசல்மேன் சாதனை படைத்துள்ளார்.

பாரிசியை பொறுத்தமட்டில் கணிதம், உயிரியல், நரம்பியல், எந்திர கற்றல் போன்ற துறைகளில் உள்ள சிக்கலான அமைப்புகளை புரிந்து கொள்ள உதவுகிற இயற்பியல், கணிதவியல் மாதிரியை உருவாக்கியவர் ஆவார்.

நோபல் பரிசுப்பணம் ரூ.8 கோடியே 55 லட்சம் ஆகும். இதில் பாதித் தொகையை மனேபேயும், ஹேசல்மேனும் பகிர்ந்துகொள்வார்கள். மீதிப்பாதியை பாரிசி பெறுவார்.

Related Posts

error: Content is protected !!