முதல் நாளிலேயே திருமாவளவன் மைக் ஆஃப்!

முதல் நாளிலேயே திருமாவளவன் மைக் ஆஃப்!

பாஜகவை சேர்ந்த ஓம் பிர்லா மீண்டும் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் தேர்வு செய்யப்பட்ட முதல்நாளிலேயே எதிர்க்கட்சி எம்.பி பேசும்போது மைக் அணைத்துவைக்கப்பட்டது அனைவர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

மக்களவையில், விசிக எம்.பி., திருமாவளவன் உரையாற்றும்போது, கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்ததை போல் இல்லாமல், உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய ஆளுங்கட்சி, மீண்டும் அத்தகைய முயற்சியை மேற்கொள்ளும். அதற்கு நீங்கள் ஒருபோதும் வளைந்து போகக் கூடாது என்றும் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா காந்தியடிகள் மற்றும் மகாத்மா ஜோதிராவ் பூலே போன்ற மாபெரும் தலைவர்களின் சிலையை ஒரு ஓரமாக கொண்டு போய் வைத்துள்ளது குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென அவரது மைக் அணைக்கப்பட்டது. எனினும் தனது பேச்சை தொடர்ந்த திருமா, அதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து திருமாவளவன் பேசிக்கொண்டிரும்போது மைக் அணைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் சபாநாயகர் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!