கள்ளச்சாராய சாவுகள்: கவர்னர் ரவியிடம் முறையிட்டார் அண்ணாமலை!

கள்ளச்சாராய சாவுகள்: கவர்னர் ரவியிடம் முறையிட்டார் அண்ணாமலை!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 58 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இன்று சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை அதிமுக எம்பி-க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!